பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணப்படி சிவபெருமானின் 64 விளையாடல்கள் மதுரையில் நடந்தேறின. ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் என்ற பட்டம் சூடிக்கொண்டுள்ள மதுரை ஆதீன 292வது மகாசன்னிதானம் கூற்றுப்படி சோமசுந்தரர் நீண்ட இடைவெளிக்கு பின் 65வது திருவிளையாடலை அதே ஸ்தலத்தில் நிகழ்த்துவதாக அறிகிறோம். மதுரை ஆதீனம் என்றால் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. ஆதி இனம் என்பது அவ்வாறு ஒற்றை சொல்லாக மருவியதாம். ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னதாக ஸ்தாபிக்கப்பட்ட ஆன்மிக அமைப்பான இதனை உலகின் பழமையான மடம் என சமஸ்கிருத நூல்களும் கூறுகின்றன. ஞானசம்பந்தர் மடம் என்று மதுரைவாசிகளால் வழங்கப்படுகிறது. அவர் தங்கியதன் நினைவாக நிறுவப்பட்டதாக தகவல் உண்டு. தேவாரம் இயற்றி இசைத்தமிழ் வளர்த்த முன்னோடியான சம்பந்தர் பெயரால் சிவாகம நியமங்களையும் சைவ நெறிகளையும் நிலைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த சீடர்களுக்கு தீட்சையளித்து ஞானோபதேசம் அருளப்படும் பெருமைக்குரிய மடம்.
மேகமில்லாத தூய வானத்தில் திடுமென வெட்டிய மின்னலாக அத்தகு மடத்தின் அடுத்த ஆதீனகர்த்தராக நித்யானந்தா எனும் உலகப்புகழ் மனிதரை அருணகிரிநாதர் நியமித்தபோது தமிழ் பேசும் நல்லுலகம் நடுங்கித்தான் போனது. இத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகு சைவ சித்தாந்தத்துக்கு எதிராக ஒரு போர் பிரகடனமா என்று பாண்டிய நாட்டின் பாரம்பரிய வழித்தோன்றல்கள் கிளர்ந்தெழுந்தனர். 'கனவில் வந்து சிவபெருமான் கட்டளையிட்டதால் கர்நாடகாவிலிருந்து நித்தியை அழைத்துவந்து முடிசூட்டினேன்' என்று மகா சன்னிதானம் சொன்னவேளைதான் 'ஆஹா, இதுவொரு திருவிளையாடலின் தொடக்கம்' என்று நமக்கு உறைத்தது. அதே ஆலவாயன் நெல்லையப்பராக அருணாச்சலேஸ்வரராக பட்டீஸ்வரராக கபாலீஸ்வரராக ஊர் ஊராக பக்தன் கனவில் நுழைந்து உத்தரவிட்டதன் பலனாக அருணகிரியின் அறிவிப்புக்கு எதிரான யுத்தம் வலுவடைந்தது. 186வது நாள் திருப்பம் நேர்ந்தது. 'எம்பெருமான் மீண்டும் கனவில் வந்தார். சொன்னார். அதன்படி நித்தியை நீக்கிவிட்டேன்' என்கிறார் பெரியவர்.தமிழக அரசும் நீதிமன்றமும் அவரை விடுமா சுடுமா என்பதை திருவிளையாடலின் கடைசி காட்சியாக காணவிருக்கிறது தமிழகம்.

No comments:
Post a Comment