பள்ளிக்கூடங்கள் எப்படி நடக்கின்றன என்பதை கண்காணித்து ஆலோசனை வழங்க அம்மாக்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மக்களாட்சி தத்துவத்துக்கு உயிரூட்டக்கூடிய சிறப்பான நடவடிக்கை. அரசுப் பள்ளிகளோடு நிறுத்தாமல் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் நிர்வாகத்தையும் பெற்றோரின் பார்வைக்கு கொண்டு வந்திருப்பதை பாராட்ட வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கழகம் என்ற பெயரில் ஏற்கனவே பள்ளிகளில் ஓர் அமைப்பு இருக்கிறது. ஆனால், அதன் செயல்பாடு மெச்சத்தக்கதாக உள்ளது என்ற செய்தியை இதுவரை கேள்விப்பட்டதில்லை. நிர்வாகியை தலைவராகக் கொண்டு சில ஆலைகளில் செயல்படும் தொழிற்சங்கம் போன்றுதான் பிடிஏக்கள் நடந்துகொள்கின்றன என்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியும். பள்ளி நிர்வாகம் அனுமதிப்பதை மட்டுமே பிடிஏ உறுப்பினர்கள் பார்க்க முடியும், கேட்க முடியும். அரசின் புதிய ஆணைப்படி, ஒவ்வொரு பள்ளியிலும் 5 அம்மாக்கள் கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும்.
கிண்டர்கார்டன் முதல் 12 வரையிலான வகுப்புகளை 5 பிரிவுகளாக்கி ஒவ்வொரு பிரிவிலும் படிக்கும் குழந்தைகளின் சார்பில் ஒரு அம்மா குழுவில் உறுப்பினர் ஆகலாம். வகுப்புகள், இருக்கைகள், குடிநீர், காற்றோட்டம், வெளிச்சம், பரிசோதனைக்கூடம், கழிவறைகள், விளையாடுமிடம், நூலகம் போன்ற அனைத்து அம்சங்களையும் குழு பார்வையிட்டு நிர்வாகத்துக்கு எழுத்து மூலம் ஆலோசனை வழங்கலாம். ஒரு குழு ஒரு முறைக்கு மேல் பள்ளியை பார்வையிட முடியாது, உறுப்பினர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது பிடிஏக்கு நேர்ந்த கதி இதற்கும் ஏற்படாமல் காப்பாற்றும். கேட்டுக்கு வெளியே ஏக்கத்துடனும் பரிதவிப்புடன் நின்று பழக்கப்பட்ட எல்லா அம்மாக்களுக்கும் பள்ளியின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் அதன் தரத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அண்ணா நூலகம் விவகாரத்தோடு ஒப்பிடும்போது அரசின் அணுகுமுறையில் தெரியும் மாற்றத்தை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள். இன்னும் அதிக கட்டணம் செலுத்தி பிள்ளைகளை படிக்க அனுப்பும் கல்லூரிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தினால் தமிழகத்தில் கல்விச் சூழல் வெளிப்படையாக மாறும். ஆரோக்யமான மாற்றத்துக்கு அது வழி வகுக்கும்.

No comments:
Post a Comment