எல்லா விஷயமும் மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை, அரசு எதை விரும்புகிறதோ அதை மட்டும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நினைப்பில் பிரச்னைக்குரிய செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகிறது சீன அரசு. இதில் லேட்டஸ்ட், ஓய்வு பெறும் பிரதமர் வென் ஜியாபோ குடும்பத்தினருக்கு 270 கோடி டாலர் (சுமார் 15 ஆயிரம் கோடி) அளவுக்கு சொத்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை இருட்டடிப்பு செய்தது.சீனாவில் நியூயார்க் டைம்ஸ் ஆங்கிலப் பதிப்புடன் சீன மொழி பதிப்பையும் கொண்டுள்ளது. இவை இன்டர்நெட்டில் மட்டும் வெளியாகும். சமீபத்தில் சீனாவின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான வென் ஜியாபோ குடும்பத்தினரின் சொத்து விவரம் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அவரது குடும்பத்தினருக்கு 270 கோடி டாலருக்கும¢ அதிகமாக சொத்துக்கள் உள்ளன என்றும் சொத்து விவரங்களையும் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இந்த செய்தி வெளியான 30 நிமிடத்தில் சீன வெளியுறவு அமைச்சகம் செய்தியை தடை செய்து விட்டது. சீனாவின் 80 கோடி இன்டர்நெட் வாசகர்களுக்கு இந்த செய்தி போக விடாமல் தடுத்து விட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் நியூயார்க் டைம்ஸின் சீன மொழி இணையதளத்திலும் செய்தி நீக்கப்பட்டது. அதோடு, இன்டர்நெட் சர்ச் இன்ஜினில் வென் ஜியாபோ, அவரது மனைவி ஷாங் பெய்லி, பிரைம் மினிஸ்டர், நியூயார்க் டைம்ஸ் என எது டைப் செய்தாலும் செய்தி வராத அளவுக்கு இணையதளத்தையே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. வேண்டுமென்றே அவதூறு கிளப்பும¢ விதத்தில் செய்தி வெளியிட்டதாக சீன அரசு தரப்பில் அவசர அவசரமாக மறுப்பு கிளம்பியுள்ளது. இதற்கு முன்பு கம்யூனிஸ்ட் தலைவர் ஜி ஜின்பிங் பற்றி புளும்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்ட போதும் இதே போல், சென்சார் செய்தது சீன அரசு.
சீனாவில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் கையில்தான் அந்த நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையும் உள்ளது. மிகப் பெரிய அரசு ஒப்பந்த பணிகளை செய்து வரும் அத்தனை நிறுவனங்களுமே அரசியல்வாதிகளின் குடும்ப நிறுவனங்கள்தான். அதனால் கோடிகள் குவிவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதை மறைக்க சீனா காட்டும் வேகம்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சீனாவில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் கையில்தான் அந்த நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையும் உள்ளது. மிகப் பெரிய அரசு ஒப்பந்த பணிகளை செய்து வரும் அத்தனை நிறுவனங்களுமே அரசியல்வாதிகளின் குடும்ப நிறுவனங்கள்தான். அதனால் கோடிகள் குவிவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதை மறைக்க சீனா காட்டும் வேகம்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment