தொழில் வளர்ச்சிக்காகவோ, சாலை பணிகளுக்காகவோ விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது, அதற்கான இழப்பீடுகளை விரைந்து வழங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அது விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் செயல் என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மகாராஷ்ட்ரா அரசு தொழிற்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1964ம் ஆண்டில் விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மட்டும் இழப்பீடு கொடுத்துள்ளது. இழப்பீடு பெறாத விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கீ¢ழ் கோர்ட், உயர் நீதிமன்றம் என பல நீதிமன்றங்களை பார்த்துவிட்டு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. இதற்குள் 48 ஆண்டுகளை கடந்து விட்டது. இத்தனை ஆண்டுகள் இழப்பீடு கொடுக்காமல் ஏமாற்றி வரும் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இழப்பீடு கொடுக்காமல் நிலத்தை கையகப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது என சாட்டையடி தீர்ப்பு வழங்கியுள்ளனர். விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாதவர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தும்போது, அவர்களுக்கு உடனே வேறு இடத்தில் நிலம் தர வேண்டும¢. அல்லது அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் தொழிலை தொடர முடியும். வாழ்க்கையை நடத்த முடியும். இழப்பீடு தராமல் இழுத்தடித்தால், அவர்கள் நாடோடிகளாக மாற வேண்டியதிருக்கும். அல்லது சமூக விரோதிகளாக மாறி விடுவார்கள். அரசே இப்படி செய்வது அவர்களின் வாழ்வுரிமை பறிக்கும் செயலாகும். சொந்தமாக நிலம் வைத்திருப்பது ஒரு உரிமை. அதை அரசே எப்படி பறிக்கலாம்? ஏழை விவசாயிகளின் வாழ்க்கையை சீரழித்து அதனால் வரும் முன்னேற்றத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதையும் அரசாங்கமே செய்கிறது. மக்களை வாழவைக்க வேண்டிய அரசாங்கமே, அவர்கள் பாழாக காரணமாக இருக்கலாமா? அரசியல் சட்டப்படி நடக்க வேண்டிய அரசு அதை மீறி நடக்கக் கூடாது. விவசாயிகளுக்கு விவசாயம் தவிர வேறு என்ன தொழில் தெரியும்? வேறு இடத்தில் நிலம் அல்லது இழப்பீடு இவை இரண்டையும் தராமல் இருப்பது சட்ட மீறல் என கூறியுள்ளனர் நீதிபதிகள். சமூகமும் அரசும் எதிராக இருக்கும்போது, ஏழை மக்களுக்கு நீதிமன்றம்தான் இன்னமும் ஒரே அரணாக இருக்கிறது. அது தொடரும் வரை கவலையில்லை.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment