நிறவெறிக்கு அழிவில்லை
சீக்கிய கோயிலில் சுட்டு வெறியாட்டம் நடத்திய அமெரிக்கனின் நோக்கம் என்ன என்பது தெரியாமலே போய்விடும் போலிருக்கிறது. மைக்கேல் பேஜ் என்ற அந்த 40 வயது ஆசாமி போலீசால் சுட்டு கொல்லப்பட்டான். அவனால் கொலை செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்தினருக்கோ நண்பர்களுக்கோ பேஜ் அறிமுகம் ஆனதில்லை. அவனே எழுதி வைத்த குறிப்புகளோ கம்ப்யூட்டர் பதிவுகளோ கிடைத்தால் கொஞ்சம் வெளிச்சம் பிறக்கும். பேஜ் ஒரு குடிகாரன் என்பது உறுதியாகி இருக்கிறது. அதனால் ராணுவத்தில் இருந்தும், லாரி கம்பெனியில் இருந்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறான். வெள்ளை நிற மனிதர்களே உலகை ஆள பிறந்தவர்கள் என்று நம்பும் கோஷ்டியில் அவன் தீவிரமாக செயல்பட்டான் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் கருப்பர்கள் ஆட்சிக்கு வந்ததோடு உலகில் நிற வெறி ஒழிந்துவிட்டதாக நினைத்தவர்கள் ஏமாளிகள். மனித இனத்தில் மாட்சிமை பொருந்தியவர்கள் வெள்ளை நிறத்தில் பிறந்த ஆரியர்கள் மட்டுமே என்ற சித்தாந்தம் இன்னும் பல நாடுகளில் வேரூன்றி விழுதுகள் விட்டு கிடக்கிறது. ஆதியில் இதற்கு உரமிட்டவர் ஹிட்லர். குருத்வாரா வில்லன் பேஜ் அந்த சர்வாதிகாரியின் ரசிகன். ஆரிய குழுவின் ஏனைய உறுப்பினர்களை சந்திக்கும்போது 88 என்ற நம்பரை சொல்லி வாழ்த்துவது வழக்கம். ஆங்கிலத்தில் எட்டாவது எழுத்து எச். இரண்டு எச் சேர்த்து சொல்வது ஹெய்ல் ஹிட்லர் என்ற வாழ்த்து கோஷம். ஆரிய வம்ச பெண்களின் அழகு பூமியில் அழிந்துவிடக் கூடாது என்பது இந்த குழுவின் ஒரு மந்திரம். பெரும்பாலும் இளைஞர்கள் இதில் உறுப்பினர்கள். பெரிய படிப்பெல்லாம் கிடையாது. ஆரியர்கள் வாழ வேண்டுமானால் மற்றவர்கள் அழிய வேண்டும் என நம்புகிற கூட்டம்.
குருத்வாராவில் புகுந்து தாக்கியதற்கு காரணம் முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் வித்தியாசம் தெரியாத அறியாமை என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர். மேலைநாடுகள் அனைத்திலும் இந்த கூட்டம் செயல்படுகிறது. பயங்கரவாதத்தின் பல முகங்களில் இதுவும் ஒன்று. அநேக நாடுகளில் பேசி பேசியே மூளைச் சலவை செய்கின்றனர். துப்பாக்கிகள் சுலபமாக விலைக்கு கிடைக்கும் நாட்டில் பேச்சைவிட செயலில் ஆர்வம் காட்டுவது முரண்பாடாக தெரியவில்லை.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment