ஒரிசாவில் தமிழ் 
என் இயற்பெயர் சிவ.பாலசுப்பிரமணி. திருச்சி உறையூரில் பிறந்து, சென்னை, விழுப்புரம், புதுச்சேரியில் படித்து வளர்ந்தேன். 1989 ஆம் ஆண்டு, ஒடிஷா மாநிலத்தில், கேலக்ஸி சுரங்க நிறுவனத்தில், வெளிநாட்டுக் கருவிகளைப் பழுது பார்க்கும் பணியில் சேர்ந்தேன். 1991 ஆம் ஆண்டு, தலைநகர் புவனேஸ்வரில் தமிழ்ச் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து, 2003 வரை, பல்வேறு பொறுப்புகளிலும், செயலர் வரையிலும் பணி ஆற்றினேன்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ‘ஒரிஸ்ஸா’ என அழைக்கப்பட்ட இன்றைய ‘ஒடிஷா’ மாநிலத்தின் வரலாற்றுப் பெயர்கள் ‘கலிங்கம்’, ஒட்டரம், தென் கோசலை தேசம். இதற்கும், தமிழகத்துக்கும் கிட்டத்தட்ட சமண மதம் தொடக்க காலத்தில் இருந்து தொடர்புகள் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டில் முறைப்படுத்தப்பட்ட ஒரிய மொழியில், தமிழின் பங்கு அளிப்பு கூடுதலாக உள்ளது. எனவே, கலிங்கத்தில் இருக்கின்ற தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் குறித்த கள ஆய்வுகளை மேற்கொண்டேன். அங்கே, பல இடங்களில் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் காணப்படுகின்றன.
 
மகாவீரர், புத்தர், அசோகர், கலிங்க மன்னன் காரவேலர் காலங்களிலிருந்து ஒவ்வொரு 250 ஆண்டுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 3000 ஆண்டுக்கால வரலாறை, தொடர்ச்சியாகப் படித்தேன். ‘பாண்டியர்கள் காலம், பல்லவர்கள் காலம், சோழர்கள்காலம், ஒட்டர்கள் காலம்’ என தனித்தனியாகஆய்வு செய்து இருக்கிறேன். அப்போது தான், எந்த அளவுக்கு, கலிங்கர்களுடைய வாழ்க்கையில், தமிழர்களுடைய பண்பாடு ஊடுருவி இருக்கின்றது என்பது புரிந்தது. இன்றைக்கு, 62 பழங்குடி மக்கள் வசிக்கின்ற ஒரிஸ்ஸாவில், 14 பிரிவினர் தமிழர்களே. மத்திய திராவிடத்தில் வசிக்கின்ற, பாணர், மலைய கந்தா, டோங்கிரி கந்தா, குயி, குவி, குடியா, கிஸான், மால்டோ, குடியா, பரோஜோ, பெங்கோ, ஓரான், கோலா, கடாபா உள்ளிட்ட பல பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழியில், 80 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் கலந்து உள்ளன. ‘கோண்டுவானா’ என்பது, ‘கந்தா’ என்கின்ற தமிழ்ப் பெயர் தான். அதே போல, ஒரிஸ்ஸா மாநிலத்தின் கடற்கரையோரத்து மீனவ மக்களான ‘நெளலியா’ என்பவர்கள் தமிழகத்தின் ‘நுளையர்’மற்றும் ‘கேவுட்டா, ‘கைபர்த்தா’ எனப்படுபவர்கள், தமிழில் ‘கயல் வணிகர்’ என்பதன் திரிபு தான் என்றும் சொல்லக் கூடிய அளவுக்கு, ஒரிஸ்ஸாவின் எல்லாத் துறைகளிலும் தமிழ் ஊடுருவி இருக்கின்றது.
 
நரேந்திரவர்மன் என்ற கங்க மன்னனுக்கும், இராஜசுந்தரி என்ற வீர இராஜேந்திரன் மகளுக்கும் பிறந்த அனந்தவர்ம சோழ கங்கன் என்ற மன்னன் பரம்பரையினர், ஒரிஸ்ஸாவில் சமார் 450 ஆண்டுகள், ‘சோட கங்கா’ என்ற பெயரில் ஆட்சி புரிந்து இருக்கின்றனர். அந்த மன்னன் தான், குலோத்துங்கனை எதிர்த்துச் சண்டை போடுகிறான்.அதைத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ விவரிக்கின்றது. அதே போல, கபிலேந்திரவர்மன் என்ற கஜபதி ஒட்டர மன்னர்கள், தமிழகத்தை, ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்து இருக்கின்றனர். போயர், ஒட்டன் செட்டி, கலிங்க செட்டி, ராஜூக்கள் என பல சமூகத்தினர் ஒரிஸ்ஸாவில் இருந்து வந்தவர்கள், இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரிஸ்ஸாவில் தமிழ் தொடர்பான 30 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுகளை நான் கண்டு பிடித்தேன். தமிழர்கள் எப்படி ஒரிஸ்ஸா வழியாக கங்கைக்குச் சென்று, கண்ணகிக்குச் சிலை அமைக்கக் கல் கொண்டு வந்தார்கள், சோழர்கள் கங்கை வரை எந்த வழியில் சென்று வந்தார்கள் என்பதை அறிய, அதே வழியில் பல தடவைகள் நான் நடந்தே சென்றேன். இன்றும் ஒரிஸ்ஸாவில் இருக்கின்ற அரச குடும்பத்தினரின் வாரிசுகள் அதற்கு உதவினர். தெற்கே ஆந்திர மாநில எல்லையான சக்கர கோட்டத்தில் இருந்து ஒரிஸ்ஸா மாநிலத்தின் வடக்கு எல்லை தண்டபுக்தி வரையிலும், 550 கிலோமீட்டர்கள் நடந்து சென்று பார்த்தேன். அந்த வழியில், ஒவ்வொரு 35 கிலோமீட்டரிலும், புளியந்தோப்புகள் உள்ளன. அதை தென்துளிக்குண்ட்டி என்று அவர்கள் அழைக்கின்றார்கள்.
 
சோழர்களின் மெய்கீர்த்தியில் சொல்லப் பட்டு இருக்கின்ற மதுர மண்டலம், மாசுனி தேசம், பஞ்சபள்ளி, கோசலை நாடு, ஓடர தேசம் உள்ளிட்ட அத்தனை இடங்களையும் பார்த்தேன். ‘சோன்பூர்’ என்ற இடத்தில், தெலுங்கு சோழர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். முக்தி லிங்கம் என்ற இடத்தில், கீழை கங்கர் என்று அழைக்கப்படுகின்ற சோழ கங்கர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். சோன்பூரில், ‘உறையூர் நாட்டு சோழ குல கமல’ என்று ஒரு செப்பு ஏடு கூட இருக்கின்றது. ஒருகாலத்தில் இந்தியா முழுமையும் தமிழ் பரவி இருந்தது என்று நாம் பொதுவாகச்சொல்லுகிறோம். ஒரிய மாநிலத்தின் வரலாறைப்படித்தாலே, பாதி அளவுக்கு அந்தக்கருத்தில் நமக்கு நம்பிக்கை வந்துவிடும். அதே போல, தமிழகத்திலும் ஒரியர்களுக்கான வரலாறு இருக்கின்றது. இலங்கை மன்னர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த கலிங்க மாகன் வாழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ‘கலிங்கராஜபுரம்’, திருநெல்வேலி மாவட்டத்தில் ‘கலிங்கப்பட்டி’,குளித்தலைக
 
கீழை நாட்டுக் கடல் பயணங்களில், நமக்கும், ஒரியர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்து உள்ளன. தென்கிழக்கு ஆசியாவுக்கு, தமிழர்கள் மட்டும் தனியாகப் போகவில்லை. கலிங்கர்களோடு சேர்ந்து தான் போனார்கள். இன்றைக்கு ஒரிஸ்ஸாவில் இருக்கின்ற ஆறு துறைமுகங்களின் பெயர்களும் தமிழ் தான். பாலூர், கலிங்கப் பட்டணம், மாணிக்கப் பட்டணம், வணிகப்பட்டணம், தேவி பட்டணம், தாமரா ஆகியவை தமிழ்ப் பெயர்களே. ‘தாமிரலிபி’ என்பது இன்றைய பெங்கால் மாநிலத்தில் உள்ளது. ‘ரூப் நாராயணம்’ என்றும் சொல்லுவார்கள். அதன் முந்தைய பெயர், ‘தம்லோக்’. அதாவது, ‘தமிழ் லோக், தமிழ் மக்கள் என்று பொருள். இப்படி, ஒரிஸ்ஸா கடற்கரையில், நிறையத் தமிழ்ப் பெயர்கள் உள்ளன. ஒரிஸ்ஸாவில் உயரமாக கட்டப்பட்டு இருப்பவை மூன்று கோவில்கள். பூரி ஜெகநாதர் கோவில், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில், கொனார்க் சூரியனார் கோவில், மூன்றுமே 216 அடி உயரம் கொண்டவை. திராவிட - கலிங்கக்கலை அமைப்பில் கட்டப்பட்டவையே. அதற்குக் காரணம் சோழர்களோடு அவர்கள் கொண்டு இருந்த தொடர்புகளே. அதே போல இராமானுஜருக்கும், ஒரிஸ்ஸாவுக்கும் தொடர்புகள் உள்ளன. பல்லவர்களுக்கும், ஒரிஸ்ஸாவுக்கும் தொடர்புகள் உள்ளன. 8 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் தாம், ‘அனந்தசயனம்’ என்ற 32 அடி நீள படுக்கை வசத்திலான சிலையை, இரண்டு இடங்களில், பிராமனி நதிக் கரையில் செதுக்கி உள்ளார்கள். இன்றைக்கும், ஒரிஸ்ஸாவில் உள்ள பல கோவில்களில் திராவிடக் கலை அதிகமாக உள்ளது. இது போல, தமிழகம், ஒரியத் தொடர்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
 
கடல் ஆய்வாளர் பாலு அவர்களுடைய ஆய்வுப் பணிகளுக்காக நார்வே நாட்டில் வசிக்கும் மதிமுக இணையதள தோழர் இல.கோபால்சாமி வழங்கிய ரூ.20,000 உதவித்தொகையை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பாலுவிடம் வழங்கினார்.
 
நன்றி
தகவல் :- திரு. அருணகிரி,
தாயகம்,
மதிமுக.

No comments:
Post a Comment