திருக்குறள் பதித்த பட்டுச் சேலை
பெங்களூரில் ஆர்எம்கேவி நிறுவனத்தினர் திருக்குறள், ரவிவர்மன் ஓவியங்கள் பதித்த 9 ரக சேலைகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினர்.இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அனைவரைப் போல சேலைகளை தயாரிப்பது எங்கள் தொழில் என்றாலும், அதில் ஏதாவது ஒரு செய்தியை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தது. அதன்படி சேலைக் கரையில் 18 திருக்குறளை பதித்து, முந்தானையில் வள்ளுவர் கோட்டத்தைப் பதித்து சேலை நெய்துள்ளோம். இதை 6 மாதம் 30 வடிவமைப்பாளர்கள், நெசவாளர்கள் கடுமையாக உழைத்து உருவாக்கினார்கள்.அதேபோல், ராஜா ரவிவர்மன் வரைந்த நளன் - தமயந்தி கதை கூறும் ஓவியங்களுடன் மற்றொரு சேலை உருவாக்கியுள்ளோம். இதை 4 நெசவாளர்கள், 3 மாதங்கள் உழைத்து உருவாக்கினார்கள்.மஞ்சள், ரோஜா, மாதுளை உள்ளிட்டவைகளிலிருந்து எடுத்த இயற்கை வண்ணங்களை கொண்டு உருவாக்கிய 50 ஆயிரம் நிறங்கள் கொண்ட சேலையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மற்றவர்களை போல் வர்த்தகத்தை மட்டுமே குறியாக எங்கள் நிறுவனம் கொள்வதில்லை.இனி வரும் சந்ததியினருக்கு நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற அரும் படைப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார் அவர்.
No comments:
Post a Comment