Thursday, 2 August 2012

உணவில் விஷம் வைக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்ச முடிவு- !

உணவில் விஷம் வைக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்ச முடிவு- !

மத்திய அரசு போன புதனன்று உச்ச நீதி மன்றத்தில் பதிவு செய்த அபிடவிட்டில் என்டோசல்பான் விஷத்தை கேரளா, கர்நாடகாவில் மட்டும் தடை செய்து மற்ற மாநிலங்களில் தயாரிக்கவும் உபயோகபடுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது..!
 

image கர்நாடகா கேரளா மட்டும் சுத்தமா இருக்கணும்;மத்தவன்லாம் விஷ உணவு உண்ண வேண்டுமா..?? அப்போ மத்தவங்க எல்லாம் சாகலாமா..! எந்த ஊர் நியாயம்..!

இதை இங்கு தேக்கிவைக்கவோ அல்லது முழுவதும் ஏற்றுமதி செய்வதோ முடியாது அதனால் மற்ற மாநிலத்தில் உபயோக படுத்த வேண்டும்..!இத சொல்ல தான் உங்களுக்கு ஒட்டு போட்டு போட்டோமா?

நம்மாழ்வார் முதற்கொண்டு அமீர்கான் வரை கதறியும் மத்திய அரசின் காதுகளில் விழாதது, அவர்கள் எந்த அளவு மக்களிடம் இருந்து விலகியும் பெருமுதலாளிகளின் விசுவாசியாகவும் உள்ளதை காட்டும்.

எல்லா நாடுகளும் இந்த விஷத்தை ஒழிக்க நினைக்கும் போது, காங்கிரஸ் அரசு மட்டும் நடைமுறைபடுத்த முயற்சிப்பது நியாயமா..??? அதுவும் ஒருதலைபட்சமாக..! சுத்தமான அயோக்கியத்தனம்/மக்கள் விரோத போக்கு அல்லவா..??

http://newindianexpress.com/cities/thiruvananthapuram/article576123.ece

http://www.thehindu.com/news/national/article3688642.ece

http://cseindia.org/node/4393

No comments:

Post a Comment