அசாம் கலவரம் ஒரு ஜீவாதார போராட்டம்
முடிச்சூர் ஸ்ருதியின் சோக முடிவு ஏற்படுத்திய தாக்கத்தால் மூவாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் நடக்கும் பரிதாபம் இன்னும் நம் உள்ளத்தை எட்டவில்லை.அசாம் கலவரம் ஓய்ந்தது போல் தோன்றினாலும், மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடு இழந்து உடமைகளை பறிகொடுத்து அகதி முகாம்களில் அரைப்பட்டினி கால்பட்டினியாக நாட்களை நகர்த்துகின்றனர். நான்கு நாளில் பலி எண்ணிக்கை 45 ஆகியிருக்கிறது. மலைஜாதி போடோ இன மக்களுக்கும் வங்கமொழி பேசும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலின் அடுத்த கட்டம் இந்த கலவரம். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து அசாமில் குடியேறிய முஸ்லிம்கள் சிறுகச்சிறுக தங்கள் நிலங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவதாக போடோக்கள் புழுங்குகின்றனர். சில கட்சிகள் கூறுவதுபோல் வங்கதேச முஸ்லிம்கள் இப்போது புதிதாக வரவில்லை. வெள்ளையர் ஆட்சி நடந்த 1930களில் அசாமுக்கு வர தொடங்கினார்கள். சமவெளி விவசாயத்தில் அனுபவம் நிறைந்த அவர்களுக்கு அசாமின் மலைப்பகுதிகளை விளைநிலங்களாக மாற்றுவது சுலபமாக இருந்தது. அவர்களின் எண்ணிக்கையும் நில உடமையும் அதிகரித்தபோது போடோக்கள் தூக்கம் தொலைத்தனர். ஏற்கனவே ஆதிவாசிகளுடன் போடோக்களுக்கு பிரச்னை இருந்தது. ஒடிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்கள் அடங்கிய சோட்டா நாக்பூர் பீடபூமியில் இருந்து வெள்ளையர் அரசால் அசாமின் தேயிலை தோட்டங்களில் வேலைசெய்ய கொண்டுவரப்பட்டவர்கள் ஆதிவாசிகள். அசாமி மொழி பேசும் பெரும்பான்மை மக்களுக்கு இந்த மூன்று பிரிவினரோடும் உறவுமில்லை பகையுமில்லை. ஏனெனில் அவர்கள் நிலத்தை நம்பி வாழவில்லை. கிழக்கு பாகிஸ்தான் இந்திரா காந்தியால் வங்கதேசமாக மாறிய பின்னர் அசாமுக்குள் ஊடுருவல் பெருகியது. போடோ தனிமாநில போராட்டம் வெடித்தது. 4 மாவட்டங்களை போடோ பிராந்திய தன்னாட்சி பகுதியாக பிரகடனம் செய்து, மாநிலத்தின் 35 சதவீத நிலப்பரப்பை அவர்களின் நிர்வாகத்தில் ஒப்படைத்தது மத்திய அரசு.
அந்த தீர்வு சிக்கலை இன்னும் பெரிதாக்கியது. அவ்வப்போது கலவரம் நடக்கிறது.ஓட்டுக்காக மத்திய மாநில காங்கிரஸ் அரசுகள் சட்டவிரோத குடியேறிகளை அரவணைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது முழு உண்மை அல்ல. அசாமில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் இந்த பிரச்னை பூதாகாரமாக உருவெடுக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரு பிரிவினர் வாழ்ந்துவரும் பகுதியில் வெளியிலிருந்து வந்து வசிப்பவர்கள் அதிகமாகும்போது நிலம், நீர், உணவு, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்து வாழ்வாதாரங்களுக்கும் கடுமையான போட்டி ஏற்படுகிறது. இருப்பதைத்தானே பங்கிட்டுக் கொள்ள முடியும். இதனால் எழும் மன வேற்றுமைக்கு சிலர் உரமூட்டி பகையாக மாற்றுகின்றனர். மொழியால் இனத்தால் மாறுபட்டவர்கள் சேர்ந்து வாழ்வது காலத்தோடு ஒட்டி படிப்படியாக நடந்தால் உரசலுக்கு இடமிருக்காது. இயல்புக்கு மாறாக அல்லது திட்டமிட்டு நடந்தால் சந்தேகம் வரும். எதிர்ப்பு கிளம்பும். வாழ்க்கையே கேள்விக்குறி ஆகும்போது யார்தான் விட்டுக் கொடுப்பார்கள்? சில நாடுகள் இதனால் சிதறிப் போயிருக்கின்றன. இன்னும் சில நாடுகள் அந்த முடிவை நோக்கி பயணிக்கின்றன.அரசியல்வாதிகள் இதை மறந்து சுயலாபத் துக்காக ஒருவருக்கு எதிராக இன்னொருவரை கொம்பு சீவிவிடும் பணியில் ஈடுபட்டால் இந்தியா வும் அந்த நிலையை தவிர்க்க முடியாமல் போகும்.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment