ராம்தேவ் நாடகம் முடிந்தது
தலைநகரில் இன்னொரு நாடகம் நடந்து முடிந்துள்ளது. ராம்தேவ் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்திருக்கிறது. சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து மகாத்மாவை அவமதிக்க மாட்டேன் என ராம்தேவ் சொன்னார். அரசியல் நோக்கமெல்லாம் தனக்கு கிடையாது என்றும் சொன்னார். வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கினார். ஆனாலும் அன்னாவுக்கு நேர்ந்த கதிதான் இவருக்கும். முதல்நாள் வந்த கூட்டத்தில் பாதிகூட மறுநாள் வரவில்லை. மூன்றாம் நாள் இன்னும் மோசம். மக்களுக்கு சலித்து விட்டது என்பதை அப்போதும் புரிந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் புரிந்துகொண்டது. அதனால் பழைய தப்பை இம்முறை செய்யவில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. சோகமாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தூது அனுப்பி கெஞ்சியிருக்கிறார் பாபா. முலாயம் சிங்கும் மாயாவதியும் போனால் போகிறது என்று 'பாபாவின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்' என அறிக்கை விடுத்தனர். ஆனால் பாரதிய ஜனதா 'மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த வாய்க்கின்ற எந்த சந்தர்ப்பத்தையும் விடக்கூடாது' என்று முடிவெடுத்து ராம்தேவ் வலையில் விழுந்தது. அதன் தலைவர் கட்கரி மேடையேறி பாபாவுக்கு ஓ போட்டார்.
ஆதரவு ஆக்சிஜன் இல்லாமல் நாடி அடங்கிக் கொண்டிருந்த பாபா படுஉற்சாகமாகி பார்லிமென்டை முற்றுகையிட கிளம்பினார். இதென்ன பல்டி என்று போலீஸ் தடுத்து கைது செய்து பஸ்ஸில் ஏற்றியதும் ஜன்னலில் பாதி உடலை நீட்டி டீவி கேமராக்களுக்கு பேட்டி கொடுத்தார். பழக்கப்பட்ட வேலை. டெல்லிவாசிகள் பாவம். போக்குவரத்து சீர்குலைந்து கஷ்டப்பட்டார்கள். ராம்தேவ் சாதாரண சாமியார் அல்லர். பதஞ்சலி யோகபீடம் என்ற பெயரில் பிரமாண்டமான நிறுவனம் வைத்திருக்கிறார். ஆயுர்வேதத்தின் பெயரால் பொருட்கள் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்று கோடிகளில் சம்பாதிக்கிறார். அறக்கட்டளைகள் நிறுவி அந்த வருமானத்துக்கு வரிவிலக்கும் பெற்றுள்ளார். யோகாசன ஆசிரியர் அதை மட்டும் கற்றுக் கொடுத்தால் மரியாதை மிஞ்சும். அவரவர் தேர்ந்தெடுத்த தொழிலை செய்வதோடு நிற்காமல் மற்ற துறைகளில் மூக்கை நுழைத்து குட்டையை குழப்பினால் அதற்குரிய விலையை கொடுத்தாக வேண்டும். ராம்தேவுக்கும் அந்த நேரம் வந்துவிட்டது.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment