"வேண்டுமானால் கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள்" - அதிகாரிகளுக்கு அறிவுரை
மனதில் நினைப்பதை அப்படியே சொன்னால் வம்பு என்பதை குழந்தைகள்கூட புரிந்து வைத்திருப்பதால் பெற்றோரின் கேள்விகளுக்கு நாசூக்காக பதிலளிக்கின்றனர். ஆனால் அரசியல்வாதியாக இருந்து கொண்டு எதார்த்தமாக பேசி சிக்கலில் மாட்டியிருக்கிறார் சிவபால யாதவ். இவர் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கின் தம்பி. உ.பி முதல்வர் அகிலேஷின் சித்தப்பா. பொதுப்பணி துறை அமைச்சராக வேலை பார்க்கிறார். அதிகாரிகளுக்கு அறிவுரை கூறப்போய் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். 'கடுமையாக உழைத்து கடமையை நிறைவேற்றுங்கள். அப்புறம் வேண்டுமானால் கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள். கொள்ளைக்காரர்கள் மாதிரி செயல்படாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார். இதற்காக எதிர்க்கட்சிகள் துள்ளி எழுந்து அவரை விளாசுகின்றன. சற்று யோசித்தால் சிவபாலர் சொன்னதில் தவறேதும் தெரியவில்லை. மாநிலம் எதுவானாலும் வருவாய், பொதுப்பணி, போக்குவரத்து துறைகள் பற்றி பொதுமக்கள் ஒரே அபிப்பிராயம்தான் வைத்திருக்கிறார்கள். கமிஷன், லஞ்சம் வாங்குவதில் இத்துறைகளுக்கிடையே போட்டி நிலவுவதாக தெரிந்து வைத்துள்ளனர். எனவே அமைச்சர் மட்டும் இப்படி ஏடாகூட ஆலோசனை சொல்லா மல் இருந்தால் அதிகாரிகள் கையை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று சந்தேகிக்க இடமில்லை. கணிசமாக பணம் புழங்கும் இடத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் கை வைக்கத்தான் செய்வார்கள் என்று பலர் நம்புகின்றனர். அறியாமல் செய்யும் தவறை மன்னிக்கலாம்; அறிந்து செய்யும் தப்புக்கு தண்டித்தே தீர வேண்டும் என்பவர்கள் சொற்பம். 'வெல்லப்பானையில் கைவிட்டவன் பின்புறத்திலா துடைப்பான்?' என்பது மறைந்த ஒரு பத்திரிகை நிறுவனர் அடிக்கடி சொல்லும் தத்துவம். இந்த அநியாய சகிப்புணர்வு உள்ள வரையில் எத்தனை அன்னா வந்தாலும் ஊழல் ஒழியாது. சிவபாலர் அதனால்தான் 'அடிக்கிறது அடிக்கிறீர்கள், வேலையை முடித்து விட்டாவது சுருட்டுங்களேன்' என்று நியாயமான கோபத்துடன் கேட்கிறார்.
சம்பளம்தான் வாங்குகிறார்களே, கட்டிங் தப்பில்லையா என்று அப்பாவிகள் கேட்கலாம். திருடனை பிடிக்கும் போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏன் விருது கொடுக்கிறார் என்று எவரும் இதுவரை கேட்டதில்லை. அதிகாரிகள் சுறுசுறுப்பாக வேலை செய்ய நல்ல வழி காட்டியிருக்கிறார் முதல்வரின் சித்தப்பா. இதற்கே விருது கொடுக்கலாம்.
சம்பளம்தான் வாங்குகிறார்களே, கட்டிங் தப்பில்லையா என்று அப்பாவிகள் கேட்கலாம். திருடனை பிடிக்கும் போலீஸ்காரருக்கு கமிஷனர் ஏன் விருது கொடுக்கிறார் என்று எவரும் இதுவரை கேட்டதில்லை. அதிகாரிகள் சுறுசுறுப்பாக வேலை செய்ய நல்ல வழி காட்டியிருக்கிறார் முதல்வரின் சித்தப்பா. இதற்கே விருது கொடுக்கலாம்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment