மத்திய பணிகளுக்கான தேர்வுகள்
மத்திய அரசின் பொருளாதாரத் துறையின் இந்தியப் பொருளாதாரப் பணிக்கான (இந்தியன் எகனாமிக் சர்வீஸ் - ஐ.இ.எஸ்) தேர்வுகளை மத்தியத் தேர்வாணையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்தப் பணிக்கான தேர்வு குறித்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் வெளியாகிறது. ஜூன் மாதம் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். நவம்பர் மாதம் இந்தத் தேர்வு நடைபெறும். இந்திய பொருளாதாரப் பணிக்கான கல்வித் தகுதி: எகனாமிக்ஸ், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம். வயது: இந்த ஆண்டு ஜனவரி 1 அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தேர்வு எழுதுபவரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். இரண்டு நிலையில் இந்தத் தேர்வு இருக்கும். முதல் கட்டத் தேர்வு எழுத்துத் தேர்வாகும். இதில் 6 தாள்கள் உள்ளன. 1. General English … 100 2. General Studies … 100 3. General Economics I … 200 4. General Economics II … 200 5. General Economics III … 200 6. General Economics I … 200 எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்முகம் நடக்கும். இது நேர்முகம் என அழைக்கப்படாமல், ஆளுமைத் திறனைச் சோதிக்கும் நிலையாக உள்ளது. இதற்கும் 200 மதிப்பெண்கள். இந்த தேர்வு குறித்து ஜுலை மாத இறுதியில் அறிவிப்பு வெளியாகும். தேர்வு மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னையில் இந்தத் தேர்வை எழுதலாம். இது தவிர இந்தியா முழுவதும் பல நகரங்களில் இத்தேர்வை எழுதலாம். தேர்வுத் தேதி, நேரம் குறித்த தகவல்கள் தேர்வெழுதுவோருக்கு அறிவிக்கப்படும். இந்தத் தேர்வு முறைகள் சிலவற்றைப் பார்ப்போமா? மூன்று நாள்கள் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பாடத்துக்கும் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். பதில்கள் அனைத்தும் கட்டுரை வடிவில் இருக்க வேண்டும். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். பதில்களைத் தேர்வர்கள் தங்கள் கையாலேயே எழுத வேண்டும். கையெழுத்து சரிவர புரியாமல் இருக்குமேயானால் மொத்த மதிப்பெண்களிலிருந்து சில மதிப்பெண்கள் குறைக்கப்படும். சுருக்கமான, முறையான, திறமையான பதில்களுக்கு உரிய மதிப்பு இடப்படும். மேலோட்டமான பதில்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது. தேர்வில் வெற்றிக்கான மதிப்பெண்களை தேர்வாணையம் தீர்மானிக்கும். தேர்வின்போது சாதாரண வகை கேல்குலேட்டர்கள் உபயோகிக்கலாம். இந்தியப் புள்ளிவிவரப் பணி (இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ்) இந்திய புள்ளிவிவரப் பணிக்கான (இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் ஸர்வீஸ்) தேர்வும் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. பொருளாதாரப் பணி போலவே இதற்கும் ஜூலை மாதத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். இந்தியப் புள்ளி விவரப் பணிக்கான கல்வித் தகுதி: புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ், கணக்கியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டப்படிப்பு. இந்தத் தேர்வுக்கும் 6 தாள்கள் 1. General English ………… 100 2. General Studies ………… 100 3. Statistics I ………… 200 4. Statistics II ………… 200 5. Statistics III ………… 200 6. Statistics IV ………… 200
நன்றி: Dinamani
No comments:
Post a Comment