மறுக்க முடியாத நீதி
தேர்தலில் தோற்றவர்கள் வழக்கு தொடர்வது புதுமையல்ல. முறைகேடு நடந்துள்ளது, தில்லுமுல்லு செய்துள்ளனர், எனவே தேர்தலை ரத்து செய் என கோரிக்கை வைப்பார்கள். நீண்ட விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி ஆகும்; சிலசமயம் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வரும். அநேகமாக அப்போது எதிர் மனுதாரரின் ஐந்தாண்டு பதவி காலம் முடிந்திருக்கும். அதனால் தேர்தல் வழக்குகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்துவது இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பிரிவில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கு அதற்கு விதிவிலக்கு. அதில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு நாடெங்கும் பேசப்படுகிறது என்றால் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்பது காரணம். அரசியல் யுத்தங்கள் தேர்தல் களத்துக்கு வெளியிலும் நடத்தப்படுவதை பார்த்துள்ளோம். அதன்படிதான் நீதிபதியின் ஒரு உத்தரவை தொடர்ந்து அமைச்சர் விலக வேண்டும் என ஒரு தரப்பும், அதற்கு அவசியமில்லை என மறுதரப்பும் அறிக்கைப் போர் தொடங்கியுள்ளன. மக்களின் கவனம் அதன் மீது இல்லை. அமைச்சரின் பதவி காலம் முடிவதற்குள் தீர்ப்பு வருமா என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் இதில் தெளிவாக இருக்கிறது. 'தேர்தல் சம்பந்தமான வழக்குகளில் உயர் நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.. வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்..' என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் இரு பிரிவுகள் வரையறுத்து கூறுகின்றன. 'தேங்கி கிடக்கும் வழக்குகளின் சுமையை தாங்க முடியாமல் தடுமாறி கொண்டிருக்கும்' நீதிமன்றங்களால் ஆறு மாதத்தில் தேர்தல் வழக்குகளை எப்படி பைசல் செய்ய முடியும் என்று சிலர் கேட்கின்றனர். முடியும் என்பதற்கு முன்னுதாரணம் இருக்கிறது. 1984ல் ஆண்டிபட்டி தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாய்தா கொடுக்காமல் தினந்தோறும் விசாரணை நடத்தி 21வது நாளில் தீர்ப்பையும் அளித்திருக்கிறார் அன்றைய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் மோகன். மூன்றாவது நாளே மனுதாரரின் சீனியர் கவுன்சல் வாய்தா கேட்டதை நிராகரித்துவிட்டு விசாரணையை தொடர்ந்ததால் மோகன் இதனை சாதிக்க முடிந்தது. ஏனைய நீதிபதிகளுக்கும் அத்தகைய உறுதி வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்ப்பது இயல்பானது.
உண்மையில் தேர்தல் வழக்குகள் நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருந்தன. தேர்தல் சம்பந்தமான எந்த சச்சரவிலும் கோர்ட் தலையிட கூடாது என்று அரசியல் சாசனத்தின் ஆர்டிகிள் 329(பி) கூறுகிறது. பதிலாக, தேர்தல் விவகாரங்களுக்கென பிரத்யேகமாக நிறுவப்படும் சிறப்பு நடுவர் மன்றங்களே , எலக்ஷன் டிரைபியூனல் , தேர்தல் தொடர்பான புகார்களை கையாளலாம் என கூறப்பட்டது. அது சொல்வதே இறுதி தீர்ப்பு. நீதிமன்றங்களும் இதை ஏற்று, தேர்தல் மனுக்களை தொடாமலே விலகி இருந்தன. வேறு பல துறைகளில் அமைக்கப்பட்டுள்ள டிரைபியூனல்களின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்கிற நடைமுறை இருக்கும்போது, எலக்ஷன் டிரைபியூனல்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் முன்வைத்தது. இதையடுத்து, எலக்ஷன் டிரைபியூனலில் சாதகமான தீர்ப்பு கிடைக்காதவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு படையெடுத்தனர். பின்னர், தேர்தல் கமிஷனால் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டாலும்கூட அவை தடங்கலின்றி சுமுகமான முறையில் தொடர்வதற்கு நீதிமன்றத்தின் உதவியை யாராவது நாடினால் நீதிமன்றம் அந்த வேண்டுகோளை நிராகரிக்க முடியாது என்று மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது. ஆக, தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றங்களின் தலையீடு இருக்கக்கூடாது என்ற அரசியல் சாசன வரையறை குறுகிய காலத்திலேயே தகர்க்கப்பட்டது. எதார்த்தம் இதுதான் என்பதை புரிந்துகொண்ட நாடாளுமன்றமும் டிரைபியூனல், ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று மூன்று தளங்களில் தேர்தல் வழக்குகள் அலைக்கழிக்கப்பட வேண்டாம் என தீர்மானித்து 1966ல் டிரைபியூனல்களை ஒழித்தது. முக்கியமான ஓர் அதிகாரம் எப்படி இடம் மாறியது என்பதை விவரிக்கும் இந்த அத்தியாயம் இந்திய தேர்தல் வரலாற்றில் மிகவும் சுவையானது. ஜனநாயகத்தின் பிரதான பணியான தேர்தல் என்பது எந்த வகையிலும் களங்கப்பட அனுமதிக்கக்கூடாது என்று அறிவார்ந்த நீதிபதிகள் கொண்டிருந்த உறுதிதான் தேர்தல் வழக்குகளை நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் கொண்டு வந்தது. ஆகவே, தாமதமில்லாத தீர்ப்புகளின் மூலம் அந்த உறுதியை நிலைநாட்டும் பொறுப்பு நாடாளுமன்றத்தையும் சட்ட மன்றங்களையும்விட நீதிமன்றங்களுக்கே அதிகம்.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment