Tuesday, 19 June 2012

புதுவகை போராட்டம்|

புதுவகை போராட்டம்
இது ஒரு புது வகையான போராட்டம். தலை வர் இல்லை. தொண்டர்களும் இல்லை. ஆனாலும் மிகப் பெரிய புரட்சிகள் எல்லாம் சாத்தியமாயிருக்கிறது. ஒரு உதாரணம் எகிப்தில் நடந்த ஆட்சி மாற்றம். நடத்தியது அனானிமஸ். இன்டர்நெட் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து இந்த அமைப்பினர் முகமூடி அணிந்து முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். எல்லையில்லாத தகவல் சுரங்கம் இன்டர்நெட். கருத்துக்களை பரிமாற, தெரியாததை தெரிந்து கொள்ள, போட்டோக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள என பல விஷயங்களை உள்ளடக்கியது. இந்த கருத்து சுதந்திரத்துக்கு தடை போட நினைக்கிறது மத்திய அரசு. ஏற்கனவே போன்கால்களை ஒட்டுக் கேட்கலாம். எஸ்எம்எஸ்களை படிக்கலாம். இமெயில்களை மேயலாம். இனிமேல் பேஸ்புக் படங்களையும் பார்க்கலாம். டிவிட்டர் தகவல்களை கண்காணிக்கலாம். பிளாக்குகளை துப்பறியலாம். நீங்கள் பார்ப்பதற்காக இன்டர்நெட்டில் பாதுகாத்து வைத்திருக்கும் ரகசிய மற்றும் குடும்ப போட்டோக்கள், தகவல்களையும் மேயலாம். இது எதற்குமே யாருடைய அனுமதியும் தேவையில்லை. இதைத்தான் எதிர்க்கிறார்கள் அனானிமஸ் ஆட்கள். ஆன்லைன் நிறுவனங்களே அதில் வரும் தகவல்களை சென்சார் செய்து பிரசுரிக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கபில் சிபலின் கோரிக்கை ஏற்க முடியாத விஷயம் என வாதாடுகிறார்கள். இன்டர்நெட்டில் ஒரு நிமிடத்துக்கு எத்தனையோ லட்சம் பக்கங்கள் கொண்ட தகவல்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. போட்டோ, விமர்சனம், தகவல், சமையல் குறிப்பு என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அப்லோடு செய்யலாம். இதில் ஏதாவது ஆட்சேபனைக்குரியது என யாராவது மெயில் அனுப்பினால் அந்த தகவல் அல்லது படம் உடனடியாக நீக்கப்படுகிறது. இன்டர்நெட்டை பொருத்தவரை இவ்வளவுதான் செய்ய முடியும்.

ஒவ்வொரு தகவலையும் படித்துப் பார்த்து கண்காணித்து அப்லோடு செய்வது என்பது இயலாத காரியம். இது அமைச்சருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அரசின் மிரட்டல் இது என்கிறார்கள் போராட்டக்காரர்கள். இன்டர்நெட் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்த கட்டம். இதில் தடை கொண்டுவர நினைப்பது சரியல்ல.




நன்றி: Dinakaran

No comments:

Post a Comment