
மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் சூகி ஜனநாயக மீட்பு போராட்டம் நடத்தி வந்ததால் 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
வீட்டுக்காவலில் இருந்ததால், அவரால் பரிசை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது சார்பில், மகன்கள் கிம், அலெக்சாண்டர் ஆகியோர் நோபல் பரிசை பெற்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட சூகி, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இப்போது அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்லோ நகரில் நேற்று நடந்த விழாவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு, சூகி நோபல் பரிசை ஏற்று உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், நமது உலகில் அமைதி என்பது இன்னும் அடைய முடியாத குறிக்கோளாகவே உள்ளது என வேதனையுடன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment