Tuesday, 19 June 2012

ஆண் உரிமை

ஆண்களுக்கு சமமாக பெண்களும் படிக்கிறார்கள். நல்ல வேலைக்கு போகிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனாலோ என்னவோ குடும்பத்தில் குழப்பமும் செய்கிறார்கள். வரதட்சணை புகாரில்  கணவனின் குடும்பத்தையே நொடியில் உள்ளே தள்ளி விடலாம் என்பதால் அஞ்சி நடுங்குகிறார்கள் ஆண்கள். இவ்வளவும் செய்துவிட்டு கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமை கேட்டு கோர்ட்டில் வாதாடியிருக்கிறார் ஒரு பெண். அதற்கு வாய்ப்பே இல்லை என கூறிவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். திருமணம் முடிந்தவுடன் தனிக் குடித்தனம் போக வேண்டும் என்பதில் எல்லா பெண்களுமே ஆர்வமாகத்தான் இருப்பார்கள். அதற்காக சண்டை போடுவார்கள், கண்ணை கசக்கிக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு போய் விடுவார்கள். சமாதானம் செய்து கூட்டி வந்தாலும் அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் வரை தகராறு செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் இம்சை தாங்காமல் ஆண்களும் சம்மதித்து விடுவார்கள். சென்னையில் ஒரு பெண், நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா எனத் திட்டி, தனிக் குடித்தனம் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கணவனை மிரட்டி வந்திருக்கிறார். அப்படியும் தனிக் குடித்தனத்துக்கு கணவன் சம்மதிக்கவில்லை. கணவன் வீட்டார் மீது வரதட்சணை புகார் கொடுத்து விட்டார். கணவனை 22 நாட்கள் உள்ளே தள்ளி விட்டார்கள். கோர்ட், கேஸ் என அலைந்ததில் வெறுத்துப் போன கணவன், மனைவி கொடுமை செய்கிறார், விவாகரத்து கொடுங்கள் என  வழக்கு தொடர்ந்து விட்டார். இந்த வழக்கில்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவர் வீட்டார் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறார் மனைவி. கணவன் சிறையில் இருந்தபோது ஜாமீன் பெறுவதையும் எதிர்த்திருக்கிறார். கணவன்தான் முதலில் விவாகரத்து கேட்டிருக்கிறார். ஆனால் சேர்ந்து வாழும் உரிமை கேட்டு மனு செய்திருக்கிறார் மனைவி. கொடுமைகளை எல்லாம் செய்துவிட்டு, எப்படி சேர்ந்து வாழ முடியும்? மனைவியின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, கணவன்தான் கொடுமைகளை அனுபவித்திருப்பது தெரிய வருகிறது. கொடுமை செய்யும் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற கணவனுக்கு உரிமை இருக்கிறது. இந்த திருமணம் செல்லாது என அறிவித்திருக்கிறது கோர்ட். மனைவி மூலம் கொடுமைகளை அனுபவிக்கும் ஆண்களுக்கு ஆறுதலான தீர்ப்பு இது.


நன்றி: Dinakaran

1 comment:

  1. 1. ரமேஷ கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். 2.ஹேமலதா பிடிவாத குணம் கொண்டவர். தான் நினைப்பதை செய்து முடிக்கும் குணம் அவரிடம் உள்ளது. 3.குடும்பத்தாரை விட்டு பிரிய வேண்டும் என்றும், தனியாக வாழ வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார். 4.தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். 5.நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?'என்றெல்லாம் திட்டினார். ரமேஷ் தனது மனைவிக்கு ஒரே 'செட்டில்மெண்ட்' ஆக இன்னும் ஒரு மாதத்துக்குள் ரூ.2.50 லட்சத்தை கொடுக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்தன‌ர். எதர்கு

    ReplyDelete