Tuesday, 19 June 2012

போதை தரும் ஒயிட்னர் "சுவாசம்', அடிமையாகும் பள்ளி சிறுவர்கள்

போதை தரும் ஒயிட்னர் "சுவாசம்',  அடிமையாகும் பள்ளி சிறுவர்கள்


கம்பத்தில் போதை தரும் ஒயிட்னர்களை சிறுவர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.சாராயம், பிராந்தி, கஞ்சா, அபின், கஞ்சா ஆயில், பிரவுன் சுகர் போன்ற போதை பொருள்களை அனைவரும் அறிவர். ஆனால் சாதாரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்டேஷனரி மற்றும் மருந்துகளை போதைக்கென பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது.குறிப்பாக தேனி மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இருமலுக்கு பயன்படுத்தப்படும் திரவ வகை சிரப், போதை பொருளாக சில மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ. 30 முதல் 50 க்குள் விற்கப்படுகிறது. 50 மில்லி கொண்ட இந்த இருமல் மருந்தை, முழுவதும் குடித்தால் மயக்கமான நிலை ஏற்படுமாம். சுவாசம்: "ஒயிட்னரை' கடைகளில் வாங்கி, அதை பாலிதீன் பையில் தண்ணீருடன் கலந்து சுவாசிக்கின்றனர்.

இவ்வாறு சுவாசிக்கும் போது, ஒருவித போதை ஏற்படுகிறது.

மீட்பு: நேற்று முன்தினம் இரவு கம்பம் நகராட்சி பூங்காவில் போலீசார் சோதனை நடத்தினர். பள்ளி சிறுவர்கள் சிலர் ஒயிட்னரை பயன்படுத்தியது தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் விசாரித்ததில், குறிப்பிட்ட ஒரு கடையில் ஒயிட்னரை வாங்கியதாக கூறினர். இவர்களை கண்டித்து போலீசார் விடுவித்தனர்.
வேலப்பர் கோயில் அருகே உள்ள கடை உரிமையாளர் பாலகுருநாதனிடம், பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ரவி, கேள்வி கேட்டுள்ளார். கடை உரிமையாளர் ரவியிடம் தகராறு செய்யவே, பாலகுருநாதனை போலீசார் கைது செய்தனர்.இன்ஸ்பெக்டர் விநோஜி கூறுகையில்,""ஒயிட்னரை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிடிபட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பினோம். ஒயிட்னர், இருமல் மருந்துகள் விற்க தடையில்லை. எனவே இவை விற்றதாக வழக்குபதிவு செய்ய முடியவில்லை,'' என்றனர்.

செய்தி: தினமலர் 

No comments:

Post a Comment