( பள்ளிபருவத்தில் தாழ்வு மனப்பானமை உள்ளவரா இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் ... இன்று திரையுலகில் மிகப்பெரிய இடத்தில் தடம் பதித்திருக்கிறார்... )
சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம்.
அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவிச்சுவெச்சுத் துவைச்சுக்கிட்டு இருப்பார்.
'என்ன நண்பா மேட்டரு? 'ன்னு கேட்டப்ப, பிசினஸ் சீக்ரெட் அப்படின்னு சொன்னார். பக்கத்து லாண்டரியில துணிக்கு ஒரு ரூபாய்னு பேசி வாங்கிட்டு வந்து, இங்கே பில்டிங் ஓனருக்குத் தெரியாமத் துவைச்சுக் கொடுக்கனும்.
படைப்பாளி ஆகுற வரைக்கும் துவைப்பாளியா இருக்கலாமேன்னு நானும் அந்த பார்ட் டைம் ஜாப்ல பார்ட்னர் ஆனேன். எக்ஸ்ட்ரா லோடு துணிகள் அள்ளிட்டு வந்து அவர் கும்மிக் கொடுக்க, நான் அலசிப் பிழியன்னு கொஞ்ச நாள் ஓடுச்சு. நாங்க காயப் போடுற துணிகள் மொட்டை மாடியின் ஒரு சதுர அடி விடாம படபடக்கும்.
ஒரு நாள் மொட்டை மாடிக்கு வந்த ஹவுஸ் ஓனர் அவ்வளவு துணிகள் காயுரதைப் பார்த்துட்டு அதிர்ச்சி ஆயிட்டாரு, அவர் பார்வையை சமாளிக்க முடியாம, நான் உண்மையைச் சொல்லிட்டேன்.
' அடப்பாவி! சினிமாவை நம்பி ஊரைவிட்டு வந்து இப்படி ஊர் பேர் தெரியாதவன் துணிகளை யெல்லாம் துவைச்சுட்டு இருக்கியேடா.... பேசாம ஊருக்குத் திரும்பிப் போயிரு'ன்னாரு .
'இதுல என்ன சார் தப்பு? லாண்டரில போடுற நம்ம துணியை யாரோ துவைக்கிற மாதிரி, யாரோ ஒருத்தங்க துணியை நான் துவைக்கிறேன்'னு சொன்னேன். ஆழமா.... அமைதியா என்னையே பார்த்தார். 'இப்ப சொன்னதைத் திரும்பவும் சொல்லுன்னாரு. சொன்னேன்.
கொஞ்ச நேரம் யோசிச்சவர். 'நீ இன்னும் ஆறு மாசம் கழிச்சு கொடு. அப்ப நிச்சயம் வாடகை கொடுக்கிற நிலைமையில் நீ இருப்ப. இனிமே இப்படித் துணி துவைக்காதே. இந்த மனநிலையை எப்பவும் மாத்திக்காதே. நீ எங்கே போனாலும் அது தான் உனக்கு துணையா நிக்கும்'னார் . கிழக்கு மேற்கு தெரியாம சென்னையில் எப்படிக் காலம் தள்ளப் போறோம்னு அதுவரை எனக்குள் இருந்த தயக்கம்,மயக்கம் எல்லாம் உருகி உருத் தெரியாம அழிஞ்ச நாள் அது.
எப்பவும் எந்த நிலைமையிலும் நாம மாறக்கூடாதுன்னு மனசுல பதிஞ்ச நாளும்கூட!"
( 'சினிமாத்தான் ஆசைன்னா தைரியமா போப்பா..
எந்த தொழிலும் தப்பு கிடையாது..உன் மேல நம்பிக்கை வை!'
அப்படின்னு சொல்லி வளர்த்தவர் அப்பா. )
சின்ன சின்ன வாய்ப்புகள் சினிமாவுல கிடைச்ச நேரத்துல..
எதிர்பாராத நாள்ல அப்பா இறந்துட்டாரு...
.மயான சடங்குகள் முடிந்து கிளம்பிட்டு இருந்தப்போ, அப்பாவோட நண்பர்கள்ல ஒருத்தர், 'பாவம் அருணாச்சலம், நல்லா உழைச்சான். புள்ளைகளைத் தறுதலையா வளர்த்துட்டதால, எந்தச் சுகத்தையும் அனுபவிக்காம கஷ்டப்பட்டே காலத்தை முடிச்சுக்கிட்டான்னு சொல்லிட்டாரு.
அவருக்கு பின்னாடி நான் நின்னுக்கிட்டிருந்ததை அவர் கவனிக்கலை.
எனக்கு நெஞ்சுக்குள்ள ஆணி அறைஞ்ச மாதிரி சுரீர்னு இருந்துச்சு.
அப்ப தீர்மானிச்சேன். நாம சினிமாவுல தொலைஞ்சு போனாலும் ,
தோத்து மட்டும் போகக்கூடாது.
எங்கப்பா என்னை சரியாத்தான் வளர்த்துருக்காருன்னு
அவங்க உணரனும்னு நினைச்சேன்................
==========================
உண்மைதானே அன்பர்களே அவர் அப்பா சரியாத்தான் வளர்த்திருக்கிறார்.. பள்ளிபருவத்தில் தாழ்வு மனப்பானமை உள்ளவரா இருந்தவர்... இன்று திரையுலகில் மிகப்பெரிய இடத்தில் தடம் பதித்திருக்கிறார்... தூற்றியவர் கண்டிப்பாக இவரது திறமையை உணர்ந்து மூக்கின் மேல் விரலை வைத்திருப்பார்.
இனிமேல் நாமெல்லாம் முன்னேற வாய்ப்பே இல்லைன்னு மூலையில் ஒதுங்கி இருக்குறவங்க கூட மனம் வைத்து விடாமல் உழைத்தால் மிகப்பெரிய இடம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக இவர் ஓர் நல்ல உதாரணம்.
தீனா, ரமணா, ஸ்டாலின், கஜினி , ஹிந்தியில் கஜினி, இப்போ ஏழாம் அறிவு... எல்லாம் அவருக்கு ஏறுமுகமே... அவரது வெற்றியில் அவரது கடின உழைப்பு தெரிகிறது.....
( ஹிப்னாடிசம் சம்பந்தமாக கதை வைத்திருந்தேன்.. தமிழ் படத்தில் இதுவரை யாரும் ஹிப்னாடிசத்தைப் பற்றி யாரும் சொல்லியதில்லை என நினைத்தேன்.. ஏழாம் அறிவில் வில்லன் ஹிப்னாடிசம் தெரிந்தவராக காட்டியிருக்கிறார்.. அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.)
==========================
ஒரு நிமிசம்;
ஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....
நன்றி: தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment