Thursday, 14 June 2012

ஃபாக்லண்ட் தீவுகள் யாருக்கு? அடுத்த வருடம் வாக்கெடுப்பு






ஃபாக்லண்ட் தீவுகள் பிரிட்டிஷ் நிலப்பரப்பாக இருந்துவருகிறது.

அர்ஜெண்டினா உரிமைகோரும் பிரிட்டிஷ் நிலப்பரப்பான அட்லாண்டிக் சமுத்திரத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள ஃபாக்லண்ட் தீவுகளுடைய மக்கள், அந்நிலப்பரப்பின் அரசியல் அந்தஸ்து தொடர்பில் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை அடுத்த வருடம் நடத்த தீர்மானித்துள்ளனர்

இந்த தீவு பிரிட்டிஷ் நிலப்பரப்பாக இருப்பதையே அதன் மக்கள் விரும்புகின்றார்கள் என்ற தெளிவான ஒரு முடிவை இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு வழங்கும் என தாங்கள் நம்புவதாக ஃபாக்லண்ட் அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஃபாக்லண்ட் மக்கள் தம்மோடு வருவதையே விரும்புவதாக அர்ஜெண்டினா சொல்வது அர்த்தமற்றது என்று அவர் கூறினார்.

ஃபாக்லண்ட் தொடர்பில் பிரிட்டனும் அர்ஜெண்டினாவும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஃபாக்லண்ட் நிலப்பரப்பு மீது அர்ஜெண்டினா படையெடுத்தது, பிரிட்டனின் இராணுவ நடவடிக்கையை அடுத்து அர்ஜெண்டினப் படைகள் சரணடைந்திருந்தனர்.

No comments:

Post a Comment