"எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்னவாக நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்!" — சாதனையாளர் திரு.நந்தகுமாருடன் ஒரு சந்திப்பு – Part 2
ஒவ்வொரு முறையும் சாதனையாளர்களை சந்திக்கும்போது ஒவ்வொரு விஷயத்தை கற்றுகொள்கிறேன். அதை எனது வாழ்க்கையில் அப்ளை செய்தும் வருகிறேன். அதன் பலனை கண்கூடாக கண்டுவருகிறேன். திரு.நந்தகுமாரை சந்தித்த பின்னர் ஒரு விஷயம் எனக்கு ஆழமாக புரிந்தது. நான் இருக்கும் சூழ்நிலையோ, எனது ACADEMIC மற்றும் CAREER ரீதியான தகுதிகளோ நாம் சாதிப்பதற்கு ஒரு போதும் தடையாக இருக்க முடியாது. நம் சாதனைகளுக்கு தடையாக இருப்பது, நமது எண்ணங்களும் அணுகுமுறைகளும் மட்டும் தான் என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன். சிக்கல்களையும் தடைகளையும் நாம் அணுகும் விதத்தை மாற்றினால் போதும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன். எனவே, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.
உங்களுக்கும் வாழ்வில் வெற்றி பெறவேண்டுமா? உங்கள் உறவினர்கள், நண்பர்கள்(?!) முன்னர் உங்கள் குடுமபத்தை தலை நிமிர்ந்து நிற்க செய்யவேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். "நான் சாதிக்கப் பிறந்தவன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று உரக்கக் கூறிக்கொண்டு உங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்க வேண்டியது தான். அப்புறம் பாருங்க… நடக்குறதை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இலக்கில்லாத வாழ்க்கை துடுப்பில்லா படகைப் போல. எனவே, உங்களுக்கென்று மிகப் பெரிய இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். அதை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறுங்கள். இறுதியில் ஒரு நாள் நீங்கள நினைத்த இடத்தில் இருப்பீர்கள். (இது குறித்து நந்தகுமார் தெளிவாக விளக்கியிருக்கிறார். கீழே உள்ள பேட்டியில் விரிவாக இடம்பெற்றுள்ளது.)
இந்த பயணத்தில் உங்களுக்கு தேவை ஒன்றே ஒன்று தான். எது நடந்தாலும் கலங்காத மனவுறுதியும், எதையும் பாஸிட்டிவ்வாக பார்க்கும் பக்குவமும் மட்டுமே.

(மேலே நீங்கள் காணும் சுவாமி விவேகானந்தாவின் புகைப்படத்துக்கு கீழே இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா? YOU ARE THE CREATOR OF YOUR OWN DESTINY.)
திரு.நந்தகுமார் கூறியிருக்கும் பல விஷயங்கள் அனுபவப் பூர்வமானவை. உண்மையானவை. நம் சூப்பர் ஸ்டார் ரஜினி பல்வேறு தருணங்களில் மேடைகளில் கூறியதைத் தான் இவரும் நாம் வெற்றிக்கு பின்பற்றவேண்டிய வழிமுறைகளாக கூறுகிறார் என்பது மிகப் பெரிய ஆச்சரியம் + சந்தோஷம். இத்துணைக்கும் இவர், ரஜினி அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டவர் அல்ல.
சாதனை படைக்க இவர் கூறும் வழிமுறைகளை நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றலாம். இவர் கூறும் வழிகளை ஐ.ஏ.எஸ்./ஐ.ஆர்.எஸ். வெற்றியோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்கவேண்டாம். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… எப்படி இருந்தாலும் சரி… எவ்வளவு கீழே இருந்தாலும் சரி… உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய வாய்ப்பு.; நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. இனி நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள் என்பது தான் முக்கியம்.
சாதிக்கத் துடிப்பவர்கள் இவர் கூறுவதையே வேத வாக்காக எடுத்துகொண்டு உங்களுக்கென்று ஒரு இலக்கை வைத்து உங்கள் பயணத்தை தொடங்குங்கள். இந்த உலகம் ஒரு மிகப் பெரிய ஓட்டப் பந்தய மைதானம். நாமெல்லாம் அதில் ஓடிக்கொண்டிருக்கிறோம். அற்ப விஷயங்களில் உங்கள் கவனத்தை சிதறவிட்டு ஓட்டத்தில் பின்தங்கிவிட வேண்டாம்.
இந்த உலகில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் "முடியாது" என்று சொல்லப்பட்டவையே. கமான்… புறப்படுங்கள்…. உங்கள் ஓட்டத்தை தடுக்கவோ, நிறுத்தவோ உங்களால் மட்டுமே முடியும். உங்களுக்கிருக்கும் சூழ்நிலைகளாலோ மற்றவர்களாலோ உங்களை தடுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.

இந்த பதிவை படியுங்கள். திரும்ப திரும்பப் படியுங்கள். இவற்றை படிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளுக்கும் இவரது கதையை எடுத்துக்கூறி தன்னம்பிக்கையோடு அவர்களை வளர்க்க முற்படுங்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் பக்குவம் உங்கள் குழந்தைகளுக்கு வந்துவிடும். கல்வியறிவை விட மேற்கூறிய இரண்டும் மிக மிக முக்கியம்.
(நான் புதிதாக உருவாக்கியிருக்கும் FORCE TEAM குறித்து பலர் என்னிடம் "FORCE TEAM ன் நோக்கமும் குறிக்கோளும் என்ன? அதன் அதில் சேர என்ன செய்ய வேண்டும்? என்ன தகுதி வேண்டும்?" என்று கேட்கிறார்கள். அது குறித்து தனியாக பதிவளிக்கிறேன். FORCE TEAM இல் சேர விரும்புபவர்களிடம் நான் முதலில் எதிர்பார்ப்பது இது போன்ற சாதனையாளர்களின் சந்திப்புக்களை அவர்கள் முழுமையாக படிக்கவேண்டும் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளவேண்டும் என்பது தான்!)
— சுந்தர்
…………………………………………………………………………………………………………….
————————————————————————————-
Please check Part 1 @ http://onlysuperstar.com/?p=15220
————————————————————————————-
திரு.நந்தகுமாருடன் நமது சந்திப்பின் இரண்டாம் பாகத்துக்கு செல்வதற்கு முன்பு, ஒரு சிறிய முன்னோட்டம்.
6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவன், ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்ற கதை!
முன்னோட்டம் : Dyselexia (கற்றல் குறைபாடு) காரணமாக படிப்பு சரியாக ஏறாததால் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிப் படிப்பை நிறுத்திய நந்தகுமார் அதற்கு பிறகு, லாட்டரி விற்பது, டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் எடுபிடி வேலை, அடுத்து ஜெராக்ஸ் கடை, பின்னர் டி.வி.- ரேடியோ மெக்கானிக், சவுண்ட் சர்வீஸ் உதவியாளர், அதற்கு பிறகு ஐஸ்-க்ரீம் விற்பனையாளர் என்று பல்வேறு வேலைகள் பார்க்கிறார். இடையே 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ப்ரைவேட்டாக எழுதுகிறார். பாஸ் செய்கிறார். பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னர் கல்லூரியில் சேர்கிறார். பின்னர் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதுகிறார். இறுதியில் மத்திய அரசின் UPSC தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வருகிறார். தற்போது சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையாளராக பணிபுரிகிறார்.
திரு.நந்தகுமார் அவர்களுடனான நமது சந்திப்பு தொடர்கிறது…
நாம் : தவிர நாம் வாழ்வில் விரும்பியதை அடையவேண்டும்… என்று நினைப்பவர்களுக்கு உங்கள் டிப்ஸ் என்ன?
திரு.நந்தகுமார் : சாதிக்கவேண்டும் என்று கருதுகிற இன்றைய இளைஞர்கள் பொதுவாகவே அதற்கு நல்ல குடும்பம், நல்ல கல்வி, வசதியான சூழல் இவையெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல… எந்த சூழ்நிலையில் இருப்பவர்களும் சாதிக்கலாம். நிறைய பேர் என்ன நினைக்கிறாங்கன்னா நல்ல ஸ்கூல்ல நல்ல காலேஜ்ல படிச்சா தான் நல்லா வரமுடியும்னு நினைக்கிறாங்க. ரொம்ப நல்ல காலேஜ் என்று பார்த்தால் தமிழ் நாட்டிலேயே மொத்தம் ஒரு பத்து காலேஜ் தான் இருக்கும். அதுல படிக்கிறவங்க தான் நன்றாக வர முடியும் என்று நினைத்தால் அது மூட நம்பிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.
நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நீங்க என்னவாக நினைக்கிறீங்களோ அது தான் ஆவீங்க. நீங்க எங்கே இருக்குறீங்க என்பது முக்கியமில்லை. என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுவே முக்கியம்.
சாதிக்க வேண்டும் என்று நீங்கள் களமிறங்கிவிட்டால் சமுத்திரமே பிளந்து உங்களுக்கு வழிவிடுவது போல அனைத்தும் உங்களுக்கு வழிவிடும். ஜெயிக்கவேண்டும் என்கிற சிந்தனை உங்களிடம் வந்துவிட்டால் போதும் அதற்கான சக்தி உங்களிடம் ஆட்டோமேட்டிகாக வந்துவிடும். அந்த எனர்ஜி உங்களுக்குள் FLOW ஆக ஆரம்பித்துவிடும். பிறகு உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களை தேடி வரும்.
நாம் : இதை அனுபவப் பூர்வமாக உணர ஆரம்பித்திருக்கிறேன் சார் நான். அந்த வகையில் உங்கள் வார்த்தைகளே எனக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது.
திரு.நந்தகுமார் : வெரி குட்… வெரி குட்…

நாம் : இந்த சாதனையை நீங்கள் எப்படி நிகழ்த்தினீர்கள் அதற்கு நீங்கள் கையாண்ட வழிமுறைகள் என்ன என்பது பற்றி எங்களிடம் பகிர்ந்துகொண்டால், எங்கள் எல்லோருக்கும் அது ஒரு வழிகாட்டுதலாக அமையும்.
திரு.நந்தகுமார் : வாழ்க்கையில் எதுவும் சாதரணமாக கிடைக்காது. இதெல்லாம் ஒரே ராத்திரியில் நடந்தது அல்ல. பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு தான் சாத்தியமாயிற்று. இலக்கை நிர்ணயிப்பதற்கு மனவுறுதியும், கடினமாக உழைப்பதற்கு விருப்பமும், அதை தொடர்ந்து செயல்படுத்த ஆர்வமும், அது நிறைவேறும் வரை விடா முயற்சியும் அவசியம். இவை எல்லாவற்றையும் நான் கடைபிடித்தேன். வெற்றி சாத்தியமாயிற்று.
நாம் : 6ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை விட்ட உங்களுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?
திரு.நந்தகுமார் : இந்த உலகில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை திறமை இருக்கும். அதை அவரவர் சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டால் போதும். என்னிடம் உள்ள தனித் தன்மையை என் பெற்றோரின் உதவியோடு நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது என்னவென்றால் GAINING PRACTICAL KNOWLEDGE IN ACTIVITIES. என் நண்பர்களும், உடன் பணிபுரிந்தவர்களும் கூட இதற்கு உதவினார்கள்.
நாம் : நீங்கள் படித்த காலத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது? அதாவது மிகப் பெரிய போராட்டம்?
திரு.நந்தகுமார் : நான் வியாசர்பாடியில் உள்ள டாக்டர்.அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தான் என்னுடைய டிகிரி படிப்பை படித்தேன். முதலாம் ஆண்டு தேர்வுக்கு முன்பு எனக்கு அம்மை போட்டுவிட்டது. சுகாதார மற்றும் இதர காரணங்களுக்காக என்னை எக்ஸாம் எழுத அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால் எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி பிரின்சிபால், மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குனர்களை சந்தித்து அவர்களை கன்வின்ஸ் செய்தேன். என்னுடைய மனவுறுதியை பார்த்து அவர்கள் என்னை தேர்வெழுத அனுமதித்தார்கள். ஆனால் தேர்வு எழுதும்போதே நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இரண்டு சப்ஜெக்ட்களில் பெயிலாகிவிட்டேன். கல்லூரி படிப்பில் என்னுடைய முதல் எக்ஸாமே தோல்வியில் தான் ஆரம்பித்தது.
——————————————————————————————————-
Lesson 1 :
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி.
தோல்வி என்ற படிகளில் கால் வைத்துத் தான் வெற்றிக்கான ஏணியில் ஏறிச் செல்ல முடியும்.
——————————————————————————————————-
நாம் : பள்ளிப்படிப்பை நிறுத்தியதற்கு நீங்க வருத்தப்பட்டதுண்டா?
திரு.நந்தகுமார் : 'பல மரம் வெட்டும் தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்று சொல்வதைப் போல, நாம் அனைத்தையும் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் ஒன்றில் கூட கவனம் செலுத்துவதில்லை. பள்ளிப் படிப்பை நிறுத்த நேர்ந்ததற்கு நான் ஒரு வகையில் சந்தோஷமே படுகிறேன். காரணம், அதனால் தான் பல வேலைகளை கற்றுக்கொள்ள முடிந்தது. அவற்றில் எனக்கு அனுபவப் பூர்வமான KNOWLEDGE கிடைத்தது.
உதாரணத்திற்கு நான் ரேடியோ மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, எலக்ட்ரானிக்ஸ் குறித்த அனுபவப் பூர்வமான அறிவு கிடைத்தது. டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்தபோது ஆட்டோமொபைல் பற்றிய அறிவு கிடைத்தது. சித்தாள் வேலை பார்த்தபோது சிவில் என்ஜினீயரிங் பற்றிய அறிவு கிடைத்தது. ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்தபோது பிரிண்டிங் பற்றி தெரிந்துகொண்டேன். இவை அனைத்தும் PRACTICAL KNOWLEDGE என்பது தான இங்கு விசேஷமே. வியாபாரம் பற்றியும் கஸ்டமர்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதையும் நான் லாட்டரி டிக்கெட் விற்றபோது கற்றுகொண்டேன். இவைகளை செய்யும்போது நான் மனமுவந்து சந்தோஷமாக செய்தேன். எந்தக் கட்டத்திலும் இந்த வேலைகளை செய்ய நேர்ந்ததற்கு நான் வருத்தப்பட்டதேயில்லை.
நாம் : இவை உங்களது CIVIL SERVICES தேர்வுக்கு எந்த வகையில் உதவின?
திரு.நந்தகுமார் : என்ன இப்படி கேட்டுடீங்க…. நான் CIVIL SERVICES தேர்வுக்கு தயாரானபோது இந்த PRACTICAL KNOWLEDGE அனைத்தும் எனது THEORITICAL KNOWLEDGE க்கு பக்க பலமாக இருந்தது. தயாராவது சுலபமாக இருந்தது. நான் வெற்றி பெற இது தான் காரணம். மேலும் இந்த CIVIL SERVICES தேர்வு பற்றி எனக்கு தற்செயலாகத் தான் தெரிந்தது. கல்லூரியில் நண்பர்கள் கூறித் தான் தெரிந்துகொண்டேன்.

நாம் : நீங்கள் ஒரு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.ஆர்.எஸ். ஆபீஸராக வேண்டும் என்று உங்களை மோடிவேட் செய்தவர்கள் யாராவது உண்டா?
திரு.நந்தகுமார் : நான் மாநிலக் கல்லூரியில் POST GRADUATION படித்த போது, பல்லாவரம் ராணுவப் பயிற்சி மையத்தில் லெப்டினென்ட் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டேன். கல்லூரியில் நான் என்.சி.சி.யில் இருந்தது இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சாலை விபத்தில் நான் சிக்கொண்ட படியால், என்னால் அதில் சேரமுடியவில்லை.
இந்நிலையில், நாளிதழ் ஒன்றில் ஒரு பிரபல கல்வி நிறுவனம், UPSC தேர்வுக்கு தயாராவதற்கு நுழைவு தேர்வு ஒன்று வைக்கப்போவதாக அறிந்து அதற்க்கு அப்ளை செய்தேன். நான் அந்த நுழைவு தேர்வை வெற்றிகரமாக எழுதி, இண்டர்வ்யூவுக்கு சென்றேன். ஆனால் நான் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து மூன்றாம் வகுப்பில் (3RD CLASS) தான் பாஸ் செய்திருக்கிறேன் என்று கூறி என்னை நிராகரித்துவிட்டார்கள். என் ஐ.ஏ.எஸ். கனவு இத்துடன் முடிந்தது என்று நினைத்து நான் வருந்திய நேரம், ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு என்றும் அதை மத்திய அரசு நடத்துகிறது என்றும் அந்த தேர்வுக்கு தயாராவதற்கு தான் என்னை நிராகரித்த மேற்படி நிறுவனம் பயிற்சியளிக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். என் நண்பன் ஒருவன் மூலம் இந்த விபரங்களை தெரிந்துகொண்டபின்னர் நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எனது பயிற்சியை துவக்கினேன்.
இந்த ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதி பாஸ் பண்றதுக்கு முன்னாடி TNPSC EXAM எழுதி அதுல க்ரூப் 2 வேலை கிடைச்சது. சம்பளம் பேசிக் எல்லாம் சேர்த்து ரூ.7000/- இருக்கும், ஆனா, நான் அதை வேணாம்னு விட்டுட்டேன். ஏன்னா, 1986 லயே நான் ஒரு நாளைக்கு லாட்டரி வித்து ரூ.300/- சம்பாதிச்சவன். So, i wanted to achieve something big.
நான் லாட்டரி வேலை பார்த்தப்போவும் சரி, மெக்கானிக் வேலை பார்த்தப்போவும் சரி, ரேடியோ ரிப்பேர், சவுண்ட் சர்வீஸ் வேலை பார்த்தப்போவும் சரி… அந்த வேலைக்கான PRACTICAL KNOWLEDGE தான் எனக்குள்ளே போச்சே தவிர நெகடிவ்வான விஷயங்கள் எதுவும் எனக்குள்ளே போகலே. என்னுடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.
——————————————————————————————————-
Lesson 2 :
செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்.
——————————————————————————————————-
நாம் : சார்… இந்த ஐ.ஏ.எஸ். மற்றும் UPSC (Union Public Service Commission) பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன். அதற்கு தயாராகவேண்டும் என்று எவராவது விரும்பினால் அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
திரு.நந்தகுமார் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பல தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் முக்கியமானது Combined Civil Service Examination for All India Services (IAS&IPS) & 24 Central Services. இதில் Indian Foreign Service (IFS) & Indian Revenue Service (IRS) அடக்கம்.

நாம் : நீங்கள் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்தவுடன் முதன்முதலில் இண்டராக்ட் செய்த மறக்க முடியாத வி.ஐ.பி.?
திரு.நந்தகுமார் : நான் இந்த ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணினப்போ எங்க கூட செலக்ட் ஆனவங்க எல்லாரும் ப்ரெஸிடென்ட் கூட ஒரு இண்டராக்ட் நடந்துச்சு. அப்போ என் கூட இருக்குறவங்க எல்லாம் அவங்களை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ, "நான் ஐ.ஐ.டி.ல படிச்சேன். நான் பிட்ஸ் பிலானில படிச்சேன். நான் ஐ.ஐ.எம்.ல படிச்சேன்…." அப்படி இப்படின்னு அறிமுகப்படுத்திகிட்டு அவங்க காலரை தூக்கிவிட்டுக்குறாங்க. அந்த கூட்டத்துல Ph.D பண்ணவங்க மட்டுமே மொத்தம் 28 பேர் இருந்தாங்க. நான் என்னோட முறை வந்தப்போ, எழுந்து நின்னு, "நான் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சவன் சார். 3rd கிளாஸ் GRADUATE" ன்னு நான் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க.
உடனே ப்ரெஸிடென்ட் கேட்டார்… "YOU MEAN DR.AMBEDKAR LAW COLLEGE?" அப்படின்னு. நான் "இல்லே… DR.AMBEDKAR GOVT. ARTS COLLEGE, VYASARPADI"ன்னு சொன்னேன். அவர் ஆச்சரியமா பார்த்தார்.
நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். "ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதுறதுக்கு பெரிசா எந்த QUALIFICATIONS கிடையாது சார். ஏதாவது ஒரு கிராஜூவேஷன் இருந்தாபோதும். பாஸ் பண்றதுக்கு பெரிசா அவங்க EDUCATION BACKGROUND இருக்கா என்றெல்லாம் பாக்குறது கிடையாது. ஐ.ஏ.எஸ். எக்ஸாம் பாஸ் பண்றதுக்கு என்னை மாதிரி ஒரு ORDINARY PROFILE இருக்குறவங்களே போதும். பெரிய PROFILE அவங்களுக்கு இருக்கணும் என்றெல்லாம் அவசியம் இல்லே. அதுவும் இந்த எக்ஸாம்ல நான் ALL INDIA FIRST RANK வந்திருக்கேன்"னு சொன்னவுடனே ரொம்ப ஆச்சரியப்பட்டார் கலாம்.
"நான் கூட இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு பெரிய படிப்பாளியா இருக்கணும்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்" அப்படின்னார். நான், "இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு நாம படிப்பாளியா இருக்கணும்னு அவசியம் இல்லே சார். நம்முடைய அறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துற பக்குவம் இருந்தாலே போதும். இந்த எக்ஸாமை ஈசியா பாஸ் பண்ணிடலாம்"னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு எல்லாரும் ஒரு மாயையை வெச்சிருக்காங்க. அந்த மாயையை உடைக்கணும் என்பது தான் என் ஆசை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சாதிக்கனும்னா ஒரு குறிப்பிட்ட சிலரால மட்டும்தான் முடியும் அப்படின்னு இன்றைய இளைஞர் சமுதாயம் நினைக்கிறாங்க. அது தப்பு. ஒரு விஷயத்தை செய்யனும்னு நினைச்சா செஞ்சிடலாம். அவ்வளவு தான். செய்றதுக்கு என்ன வேண்டும் என்று தான் யோசிக்கவேண்டுமே தவிர, அவனுக்கு மட்டும் கிடைத்துவிட்டதே என்று எவரும் ஆதங்கப்படக்கூடாது. ஏன்னா, கடவுள் நம்ம எல்லாருக்குமே தனித் திறமையை கொடுத்திருக்கிறார்.
——————————————————————————————————-
Lesson 3 : சாதிக்க விரும்புபவன் முதலில் தூக்கியெறிய வேண்டிய குணம் பொறாமை.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (குறள் 170)
பொருள் : பொறாமைப்பட்டு வளர்ச்சி அடைந்தவரும் இல்லை. பொறாமை இல்லாதவர் வளர்ச்சி குன்றி அழிந்ததும் இல்லை.
——————————————————————————————————-
நாம் : ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகிறவர்க்ளுக்கு உங்கள் டிப்ஸ் என்ன?
திரு.நந்தகுமார் : ஐ.எஸ்.எஸ். தேர்வுக்கென்று மட்டுமே தனிப்பட்ட தயார் முறைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், பொதுவான தேர்வு நடத்துகிறது.
இதில் வெற்றி பெற விரும்புபவர்கள், பிழையின்று படிப்பது, எழுதுவது, பேசுவது உள்ளிட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். இரண்டு விதமான KNOWLEDGE இந்த தேர்வுக்கு அவசியம். ஒன்று Basic Knowledge மற்றொன்று Current Affairs.
நாம் : ஐ.ஆர்.எஸ். ஆகி இப்படி ஒரு உயர்ந்த பதவியில் இருப்பதால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது ? நான் கேட்பது உங்களைப் போன்ற புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதவி ஒரு தடையாக இல்லையா?
திரு.நந்தகுமார்: அரசுத் துறைகளில் உயர்ந்த இடத்தில் அதிகாரியாக பணிபுரிய ஆர்வமும், துடிப்பும் அவசியம். நீங்கள் எந்த அரசுத் துறையில் பணிபுரிந்தாலும், விரிவான மேலாண்மையும், பணியாளர் நிர்வாகமும், அதிக பட்ச நிதி மேலாண்மையும், முக்கியமாக சூழ்நிலையை திறம்பட நிர்வகிக்கும் மேலாண்மையும் உங்களுக்கு அத்துபடியாகிவிடும்.
ஆனால் எடுத்த எடுப்பில் நான் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வந்து உட்கார்ந்து விடவில்லை. அதற்கு முன்பும், மாநில அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை ஊழியராக அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். உதவி அதிகாரி, பஞ்சாயத் இயக்குனர், கூட்டுறவுத் துறை சப்-ரெஜிஸ்ட்ரார் இப்படிப் பல. உண்மையில் நான் UPSC தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், நான் தேர்ந்தெடுத்தது இந்த ஐ.ஆர்.எஸ். துறை. (INDIAN REVENUE SERVICE).
நாம் : தற்போதுள்ள் துறையில் உங்கள் பணி என்ன?
திரு.நந்தகுமார் : தகுதியுள்ள அனைவரையும் தங்கள் வருமானத்திற்கு சரியான வரிகளை கட்டவைப்பது. காரணம் வரிகளின் மூலம் தான் அரசாங்கங்கள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
நாம் : நீங்கள் பல கல்லூரிகள், மற்றும் பள்ளிகளுக்கு சென்று "வெற்றி நிச்சயம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியிருக்கிறீர்கள். அது மாணவர்களுக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாய் இருந்தது? தனிப்பட்ட முறையில் உங்களிடம் வந்து நன்றி சொன்னவர்கள் யாராவது உண்டா?
திரு.நந்தகுமார் : ஒரு முறை ஒரு பள்ளிக்கு சென்றபோது படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு மாணவன் என்னிடம் வந்து, என் கதையை கேட்ட பிறகு, தான் படிப்பை தொடர விரும்புவதாக கூறினான். கூடவே தன்னுடைய தனித் திறமையான செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தப்போவதாக கூறினான். பின்னர் அவன் மாவட்ட மாநில போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுவிட்டான். தற்போது தேசிய, சர்வேதேச போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறான்.
நாம் : சார்… எவ்ளோ நல்லா விஷயம்…. வாழ்த்துக்கள். நன்றிகள்.

திரு.நந்தகுமார் : அதே போல கும்மிடிபூண்டி அருகே மூன்று பள்ளி மாணவிகள், தாங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகவும், ஆனால் என் கதையை கேட்டபிறகு மூவரும் மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்றதாகவும், தற்போது +1 வகுப்பில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார்கள்.
10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வெழுதும் சென்னை மாநகராட்சியின் 30,000 மாணவ மாணவியருக்கு அவர்களக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொருட்டு தேர்வுக்கு முன்பு அவர்களிடம் உரையாற்றினேன். இதையடுத்து பொதுத்தேர்வில் முதன் முறையாக மாநகாராட்சி பள்ளிகள் வரலாறு காணாத அளவு சாதனைகளை நிகழ்த்தின என்று கூறுகிறார்கள். முதன்முறையாக மொத்த தமிழக சராசரி வெற்றி சதவீதத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகள் முந்தின.
(எழுந்து நின்று கைகளை தட்டுகிறோம்.)
திரு.நந்தகுமார் : தினமலர் நாளிதழ் பல ஊர்களில் நடத்திய "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன். இதைத் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததால் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் மாவட்ட கலக்டர்களும் எனக்கு நன்றி கூறினார்கள்.
இதைத் தவிர கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு ஒரு விசேஷ ப்ரோக்ராமை வடிவமைத்துள்ளேன். அதற்கு பெயர் Entrepreneur Development Programme (EDP) அதாவது "தொழில் முனைவோர் முன்னேற்ற திட்டம்". இதன் குறிக்கோள் வாழ்க்கையில் உயர்ந்தவற்றை நினைத்து அந்த குறிக்கோளை அடைய முற்படுவதே.
நாம் : நாட்டின் இன்றைய தேவை இளைஞர்களுக்கு இது போன்ற வழிகாட்டுதல்கள் தான் சார்.
நாம் : உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் லட்சியத்துக்கு எந்தளவு உறுதுணையாக இருந்தார்கள்?
திரு.நந்தகுமார் : என் அம்மா மல்லிகா. அவர்கள் தான் என் முயற்சிகளில் நான் தோல்வியுறும் போதேல்லாம் என்னை தட்டிக்கொடுத்து என் கண்ணீரை துடைத்தது. அடுத்து என் தந்தை வீரமணி. வாழ்க்கையை புரிந்துகொள்ள கற்றுக்கொடுத்தவர் அவர். என்னுடைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
நாம் : உங்கள் மனைவி உங்கள் லட்சியத்தில் எந்தளவு துணை நின்றார்?
திரு.நந்தகுமார் : என் மனைவி விஜயலக்ஷ்மி நான் என் இலட்சியத்தில் வெற்றி பெற மிகவும் உறுதுணையாக இருந்தார். என்னை தனிப்பட்ட முறையில் நன்கு கவனித்து கொண்டார்.
நாம் : உங்கள் உடன் பிறந்தவர்கள்?
திரு.நந்தகுமார் : என்னுடைய சகோதரி ராணி மற்றும் ராதா. அப்புறம் சகோதரர் சாக்ரடீஸ். இவர்கள் அனைவரும் நான் பள்ளிப் பருவ காலத்தில் படிப்பை நிறுத்திய போது எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பாதையை செப்பநிட்டதில் பங்குண்டு.
நான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.
நாம் : உங்களுடைய இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் ஏதாவது அவமானத்தை சந்தித்திருக்கிறீர்களா? உனக்கெல்லாம் என்ன படிப்பு வேண்டி கிடக்கு என்பது போன்ற கேள்விகளை சந்தித்திருக்கிறீர்களா ?
திரு.நந்தகுமார் : அதெல்லாம் டெய்லி உண்டு. நிறைய இன்சிடென்ட்ஸ் இருக்கு. யாராவது ஒரு விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று என்னிடம் கூறினால், நான் அதை செய்துகாட்ட முற்படுவேன். இது ஏதோ வீராப்புனால கிடையாது. முதல்ல, அவங்க ஏன் முடியாதுன்னு சொல்றாங்க என்பதன் காரணத்தை ஆராய்ந்து அதை முதலில் கண்டுபிடிப்பேன். ரெண்டாவது அது என்னால முடியும்னு நான் நினைச்சா அதை செய்றதுக்கு என்ன தகுதிகளை நான் வளர்த்துக்கொள்ளவேண்டும்? என்று யோசிப்பேன். மூன்றாவது அதற்கு எனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அந்த செயலை முடிப்பதற்கான பணிகளில் இறங்குவேன்.
என்னை அவமானப்படுத்த அவர்கள் கூறும் விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அதை முடித்துகாட்ட நான் முயற்சிப்பேனே தவிர, அப்படி கூறுபவர்களை திரும்ப திட்டுவதோ, அவர்களை பழிவாங்க முற்படுவதோ உள்ளிட்ட எதையும் நான் செய்ய மாட்டேன். அதே போல, ஜெயித்த பிறகு, "இதோ பார் நான் ஜெயிச்சு காண்பிச்சுட்டேன்" என்று அவர்கள் முன்னாள் போய் நின்று மார்தட்டும் எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (குறள் 157)
பொருள் : பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
நமக்கு என்ன நடக்கிறதோ அது வாழ்க்கையல்ல… அப்படி நடப்பவற்றுக்கு எப்படி ரீயாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை. தன்னை இகழ்ந்தவர்களை இவர் பதிலுக்கு பதில் என்ற ரீதியில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் இன்று ஐ.ஏ.எஸ். பாஸ் செய்து, இப்படி ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டார். இவர் கவனம் அனைத்தும் அவர்களுக்கு பதிலடி கொடுப்பது பற்றியே போயிருக்கும்.
——————————————————————-
நாம் : நீங்கள் வளரும்போது உங்களை ஏளனப்படுத்தியவர்களை நீங்கள் வளர்ந்து ஆளான பிறகு தற்செயலா பார்த்த சந்தர்ப்பம் ஏதாவது உண்டா?
திரு.நந்தகுமார் : நிறைய உண்டு. நான் மெக்கானிக் ஷெட்ல இருந்து ப்ரைவேட்டா படிக்க ஆரம்பிச்சப்போ எங்க ஏரியாவுல இருக்குற ஒருத்தரு கிட்டே அட்டஸ்டேஷன் வாங்க போவேன். அவர் ஒரு GAZETTED OFFICER. அவரோட பசங்க கொஞ்சம் அப்படி இப்படி rough & tough ஆ இருப்பாங்க. நம்மளை ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. நான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் ஐ.ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன். அவர், "வாங்க சார்…. வாங்க சார்….எப்படி இருக்கீங்க…." அப்படின்னு கேட்டுட்டு… அவர் பசங்களை, "டேய் நந்தகுமார் சார் வந்திருக்கார்… வாங்கடா" அப்படின்னு கூப்பிட்டார். என்னை வாடா…போடான்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தவர் திடீர்னு… "வாங்க சார்… போங்க சார்"னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப ODD ஆ இருந்தது. "சார் நீங்க எப்பவும் போலவே என்னை வாடா… போடா"னு கூப்பிடுங்க. சார்னெல்லாம் கூப்பிடாதீங்க. எனக்கு என்னவோ போலிருக்கு"ன்னேன்.
சாயந்திரம், பங்க்ஷன் அட்டென்ட் பண்ண மண்டபத்துக்கு வந்தேன். என்னை பார்த்துட்டு, "இங்கே எங்கேடா வந்தே?"ன்னு கேட்டார். "சும்மா பார்க்கலாம்ன்னு வந்தேன் அண்ணே" னு சொன்னேன்.
பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகும்போது நான் மேடையில போய் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்துல அவருக்கு புரிஞ்சிடிச்சு பாராட்டு விழாவே எனக்குத் தான்னு. அவருக்கு கையும் உடலே. காலும் உடலே. தவிக்கிறார். பங்க்ஷன் முடிஞ்சப்புறம் என் கிட்டே வந்து "சாரி…சார்… உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……!!" அப்படின்னார் ரொம்ப சங்கடப்பட்டுகிட்டு.
இதுபோல நிறைய உண்டு.

(Presenting Rajini's Punchtantra book to Mr.Nandakumar)
நாம் : அடிப்படையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்க ளைப் பற்றிய தளம் இது என்பதால் ஒரு கேள்வி…சூப்பர் ஸ்டார் ரஜினி பத்தி உங்களோட அபிப்ராயம்?
திரு.நந்தகுமார் : ரஜினி, எம்.ஜி.ஆர். படங்களாகட்டும், பாடல்களாகட்டும், நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கு. அவங்களுக்குள்ளே இருக்குற டாலன்ட்டை அவர் படங்கள் கிளறிவிடும்.
அவர் படங்கள்ல எனக்கு 'தர்மதுரை' ரொம்ப பிடிக்கும். அதல வர்ற "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன" ஸாங், ரொம்ப பிடிக்கும். அப்புறம் 'ஆறிலிருந்து அறுபது வரை', படம்… ரியல்லி எ வொண்டர்புல் மூவி. INSPIRING ONE. சாதரணமா இருந்து பெரிய ஆள் ஆகுற அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய படங்கள் சொல்லிகிட்டே போகலாம். உண்மையில் ரஜினி ஒரு மிகப் பெரிய INSPIRING PERSONALITY. ஆனால் அதை ஆக்கப்பூர்வமா எடுத்துக்கணும். அவர் நடிப்பது ஒரு படம் என்று மட்டும் நினைக்காமல், அதை ஒரு ஆளுமை விஷயமா நினைச்சி அந்த VALUES ஐ நமக்குள்ளே கொண்டு போகணும். அப்போ என்னாகும்னா நீங்களும் ஒரு பெரிய ஆளா வருவீங்க. அதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
திரு.நந்தகுமார் : அவர் நடிப்பு க்ரியேட் பண்ற அந்த இன்ஸ்பிரேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாதிப்பை எனக்கு வேறு எந்த நடிகரும் ஏற்படுத்தியதில்லை. அவர் ஒரு படத்துல நம்மை அழவைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நானும் அழுதுவிடுவேன். ஒரு எதிரியை பழிவாங்குகிறார் என்றால் நானும் என் எதிரியை பழிவாங்கியது போல உணர்வேன். ஒரு காமெடிக் காட்சியில் நடிக்கிறார் என்றால் நானும் அதில் லயித்துப் போய் சிரிப்பேன். அந்தளவு அவர் என்னை INSPIRE பண்ணியிருக்கிறார். அவருடைய பல படங்கள் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. பொதுவாக எல்லா நடிகர்களையும் நான் ரசித்திருக்கிறேன். ரஜினி சாரை மட்டும் அதிகமாக ரசித்திருக்கிறேன்.
நாம் : அவர் படங்கள்ல உங்களுக்கு பிடிச்ச பாட்டு….. inspirational songs?
திரு.நந்தகுமார் : 'பாட்ஷா'வுல வர்ற "எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையை பிரிச்சிக்கோ", 'முத்து'ல வர்ற "ஒருவன் ஒருவன் முதலாளி", 'அண்ணாமலை' "வந்தேண்டா பால்காரன்" இந்த சாங்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல பார்த்தீங்கன்னா…. இந்த "வந்தேண்டா பால்காரன்" பட்டை என்னோட காலர் டியூனாவே நான் வெச்சிருந்தேன். நிறைய பேர் கேட்டாங்க… "ஒரு டெபுடி கமிஷ்னரா இருந்துகிட்டு இந்த பாட்டை வெச்சிருக்கீங்க?" ன்னு. என்னோவோ தெரியலே… அந்த ஸாங்கை கேட்கும்போதே எனக்கு VIBRANT ஆ இருக்கும். அந்த பட்டுள்ள ஒரு ENTHU இருக்கும். அப்படி ஒரு எனர்ஜிடிக் பாட்டு அது. தவிர அர்த்தமுள்ள பாட்டும் கூட. அது ஒரு SYMPHONY MUSIC.
நாம் : இது புது விஷயமா இருக்கே.. எந்த மாதிரியான சிச்சுவேஷன்கள்ல பாடுவீங்க?
திரு.நந்தகுமார் : என் நண்பர்களோட திருமணத்துக்கோ அவங்க வீட்டு விஷேஷத்துக்கோ போனா, என்னை பாடச் சொன்னா அங்கே இந்த ஸாங்கை பாடுவேன்.

நாம் : எங்கள் தள வாசகர்களுக்கு இறுதியாக உங்கள் மெசேஜ் என்ன?
திரு.நந்தகுமார் : WHAT YOU THINK YOU BECOME
நாம் : வொண்டர்ஃபுல் சார்…. இதைத் தான் சார் ரஜினி சார் தன்னை சந்திக்கிறவங்க கிட்டேயெல்லாம் சொல்றாரு.
திரு.நந்தகுமார் : அப்படியா…. வெரி நைஸ்…
நாம் : தன்னை சந்திக்கும் முக்கியஸ்தர்களுக்கு ரஜினி தன்னுடைய குட்டி சிலை ஒன்றை பரிசளிக்கிறார். அதன் கீழே நீங்கள் கூறியே இதே வார்த்தைகள் தான இருக்கும். WHAT YOU THINK YOU BECOME. (நாம் பேட்டிக்கு சென்ற ஒரு முக்கியஸ்தரின் டேபிளில் ரஜினி அவருக்கு பரிசளித்த மேற்படி சிலையை புகைப்படத்தில் மேலே பாருங்கள்.) ஒரு மாபெரும் சாதனையாளரான நீங்கள் கூறும் வார்த்தைகளும் எங்கள் தலைவர் எங்களுக்கு கூறும் வார்த்தைகளும் ஒன்றாக இருப்பது அதிசயம் சார்.
இதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் தெரிகிறது… வெற்றியாளர்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள் போல. மேலும், ரஜினி சார் கூறும் அறிவுரைகளை கேட்டு அவரது வார்த்தைகளின் படி நடந்தாலே போதும்… ஒருவர் சாதனையாளராகி விடலாம் என்பதும் புரிகிறது…
திரு.நந்தகுமார் : நிச்சயமா சுந்தர்… அதில் சந்தேகமேயில்லை. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். வெற்றியாளர்களை இன்ஸ்பிரேஷனா எடுத்துகோங்க. ஆனா கம்பேர் பண்ணிக்காதீங்க. பண்ணா என்ன ஆகும்னா… நான் அவரை மாதிரி வரமுடியல்; இவரை மாதிரி வர முடியலே… அப்படின்னு சொல்வோம். So, நீங்க என்னவாக விரும்புறீங்க என்பது தான் முக்கியம். என்னவாக விரும்புறீங்கன்னு முடிவு செஞ்ச பிறகு, அதற்க்கான ஒரு துறையை தேர்ந்தெடுங்க. பின்னர் அதற்கான திறமையை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சாதனைக்கான நேரத்தை நீங்களே தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு வருஷத்துல ஆயிட்டாரேன்னோ… இவர் ரெண்டு வருஷத்துல ஆயிட்டாரேன்னோ கம்பேர் பண்ணிக்க கூடாது. உங்களுக்கு ரெண்டு வருஷம் ஆகும் என்றால் தாராளமாக ரெண்டு வருஷம் எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதுவாக ஆவீர்கள்.
திரு.நந்தகுமார் : எல்லா விஷயமும் எல்லாருக்கும் ரீச் ஆவதில்லை. அப்படியிருக்கும்போது என்னோட இந்த அனுபவங்கள், நெட்ல இருக்குறவங்க கிட்டே ரீச் ஆச்சுன்னா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் பரவும். அதுவே எனக்கு போதும். அந்த வகையில் இது நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி.
நாம் : எனக்கு உங்களோட வாழ்த்துக்கள் ஆசிகள் வேண்டும் சார்….
திரு.நந்தகுமார்: நிச்சயமா. WHAT YOU THINK YOU BECOME.

நாம் : என் வாழ்க்கை பயணத்தில் இனி நீங்களும் என்னுடன் இருப்பீர்கள், என்னை அவ்வப்போது என் இலக்கை அடைய உற்சாகப்படுத்துவீர்கள் என்பது நிச்சயம். அது தவிர, எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு என் இலக்கை எட்டிய பின்னர் மீண்டும் ஒரு முறை உங்களை சந்திப்பேன்.
திரு.நந்தகுமார்: ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்.
நாம் : உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இருந்தால் 'கடவுள் இருக்கிறார்' என்று உங்களை பரிபூரணமாக நம்பவைப்பது எது? உங்கள் சொந்த அனுபவத்தில்?
திரு.நந்தகுமார்: கடவுள் நம்பிக்கை நிச்சயம் உண்டு. எப்படின்னா…. 6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தியதால், நான் எப்படி வேண்டுமானாலும் போயிருக்க வாய்ப்புண்டு. அந்த பருவங்களில் ஒரு சிறிய கெட்டப் பழக்கம் என்னிடம் வந்திருந்தால் கூட என் வாழ்க்கை திசை மாறி போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடக்காமல் என்னை கட்டுப்பாட்டோடு இருக்கவைத்து இன்று இந்த சேரில் உட்காரவைத்திருக்கிறான் இறைவன். அந்த வகையில் ஆண்டவனுக்கு நான் ஒவ்வொரு கணமும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நாம் : கடல் நடுவே கடும் புயலில் மாட்டிக்கொண்ட ஒரு சாதாரண பாய் மரக்கப்பல் பத்திரமாக கரை சேர்வது என்பது மனிதன் கைகளில் மட்டும் இல்லையே. அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
திரு.நந்தகுமார் : Very true. "கடவுளை வணங்கு ஆனால் உன் சம்மட்டியை நிறுத்தாதே!!" மற்றவற்றை அவன் பார்த்துக்கொள்வான்.
[END]
The following Padayappa song is dedicated to Nandakumar sir as it reflects his own life.
Singa Nadai Pottu – Padayappa Song
————————————————————————————-
Source:
Part 2 @ http://onlysuperstar.com/?p=15376
Please check Part 1 @ http://onlysuperstar.com/?p=15220
————————————————————————————-
உங்களுக்கும் வாழ்வில் வெற்றி பெறவேண்டுமா? உங்கள் உறவினர்கள், நண்பர்கள்(?!) முன்னர் உங்கள் குடுமபத்தை தலை நிமிர்ந்து நிற்க செய்யவேண்டுமா? நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். "நான் சாதிக்கப் பிறந்தவன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று உரக்கக் கூறிக்கொண்டு உங்கள் இலக்கை நோக்கி பயணத்தை தொடங்க வேண்டியது தான். அப்புறம் பாருங்க… நடக்குறதை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இலக்கில்லாத வாழ்க்கை துடுப்பில்லா படகைப் போல. எனவே, உங்களுக்கென்று மிகப் பெரிய இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். அதை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறுங்கள். இறுதியில் ஒரு நாள் நீங்கள நினைத்த இடத்தில் இருப்பீர்கள். (இது குறித்து நந்தகுமார் தெளிவாக விளக்கியிருக்கிறார். கீழே உள்ள பேட்டியில் விரிவாக இடம்பெற்றுள்ளது.)
இந்த பயணத்தில் உங்களுக்கு தேவை ஒன்றே ஒன்று தான். எது நடந்தாலும் கலங்காத மனவுறுதியும், எதையும் பாஸிட்டிவ்வாக பார்க்கும் பக்குவமும் மட்டுமே.

(மேலே நீங்கள் காணும் சுவாமி விவேகானந்தாவின் புகைப்படத்துக்கு கீழே இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் என்ன தெரியுமா? YOU ARE THE CREATOR OF YOUR OWN DESTINY.)
திரு.நந்தகுமார் கூறியிருக்கும் பல விஷயங்கள் அனுபவப் பூர்வமானவை. உண்மையானவை. நம் சூப்பர் ஸ்டார் ரஜினி பல்வேறு தருணங்களில் மேடைகளில் கூறியதைத் தான் இவரும் நாம் வெற்றிக்கு பின்பற்றவேண்டிய வழிமுறைகளாக கூறுகிறார் என்பது மிகப் பெரிய ஆச்சரியம் + சந்தோஷம். இத்துணைக்கும் இவர், ரஜினி அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டவர் அல்ல.
சாதனை படைக்க இவர் கூறும் வழிமுறைகளை நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றலாம். இவர் கூறும் வழிகளை ஐ.ஏ.எஸ்./ஐ.ஆர்.எஸ். வெற்றியோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்கவேண்டாம். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… எப்படி இருந்தாலும் சரி… எவ்வளவு கீழே இருந்தாலும் சரி… உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய வாய்ப்பு.; நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. இனி நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள் என்பது தான் முக்கியம்.
சாதிக்கத் துடிப்பவர்கள் இவர் கூறுவதையே வேத வாக்காக எடுத்துகொண்டு உங்களுக்கென்று ஒரு இலக்கை வைத்து உங்கள் பயணத்தை தொடங்குங்கள். இந்த உலகம் ஒரு மிகப் பெரிய ஓட்டப் பந்தய மைதானம். நாமெல்லாம் அதில் ஓடிக்கொண்டிருக்கிறோம். அற்ப விஷயங்களில் உங்கள் கவனத்தை சிதறவிட்டு ஓட்டத்தில் பின்தங்கிவிட வேண்டாம்.
இந்த உலகில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் முதலில் "முடியாது" என்று சொல்லப்பட்டவையே. கமான்… புறப்படுங்கள்…. உங்கள் ஓட்டத்தை தடுக்கவோ, நிறுத்தவோ உங்களால் மட்டுமே முடியும். உங்களுக்கிருக்கும் சூழ்நிலைகளாலோ மற்றவர்களாலோ உங்களை தடுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.

இந்த பதிவை படியுங்கள். திரும்ப திரும்பப் படியுங்கள். இவற்றை படிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தைகளுக்கும் இவரது கதையை எடுத்துக்கூறி தன்னம்பிக்கையோடு அவர்களை வளர்க்க முற்படுங்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் பக்குவம் உங்கள் குழந்தைகளுக்கு வந்துவிடும். கல்வியறிவை விட மேற்கூறிய இரண்டும் மிக மிக முக்கியம்.
(நான் புதிதாக உருவாக்கியிருக்கும் FORCE TEAM குறித்து பலர் என்னிடம் "FORCE TEAM ன் நோக்கமும் குறிக்கோளும் என்ன? அதன் அதில் சேர என்ன செய்ய வேண்டும்? என்ன தகுதி வேண்டும்?" என்று கேட்கிறார்கள். அது குறித்து தனியாக பதிவளிக்கிறேன். FORCE TEAM இல் சேர விரும்புபவர்களிடம் நான் முதலில் எதிர்பார்ப்பது இது போன்ற சாதனையாளர்களின் சந்திப்புக்களை அவர்கள் முழுமையாக படிக்கவேண்டும் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளவேண்டும் என்பது தான்!)
— சுந்தர்
…………………………………………………………………………………………………………….
————————————————————————————-
Please check Part 1 @ http://onlysuperstar.com/?p=15220
————————————————————————————-
திரு.நந்தகுமாருடன் நமது சந்திப்பின் இரண்டாம் பாகத்துக்கு செல்வதற்கு முன்பு, ஒரு சிறிய முன்னோட்டம்.
6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவன், ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்ற கதை!
முன்னோட்டம் : Dyselexia (கற்றல் குறைபாடு) காரணமாக படிப்பு சரியாக ஏறாததால் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிப் படிப்பை நிறுத்திய நந்தகுமார் அதற்கு பிறகு, லாட்டரி விற்பது, டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் எடுபிடி வேலை, அடுத்து ஜெராக்ஸ் கடை, பின்னர் டி.வி.- ரேடியோ மெக்கானிக், சவுண்ட் சர்வீஸ் உதவியாளர், அதற்கு பிறகு ஐஸ்-க்ரீம் விற்பனையாளர் என்று பல்வேறு வேலைகள் பார்க்கிறார். இடையே 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ப்ரைவேட்டாக எழுதுகிறார். பாஸ் செய்கிறார். பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னர் கல்லூரியில் சேர்கிறார். பின்னர் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதுகிறார். இறுதியில் மத்திய அரசின் UPSC தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வருகிறார். தற்போது சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையாளராக பணிபுரிகிறார்.
திரு.நந்தகுமார் அவர்களுடனான நமது சந்திப்பு தொடர்கிறது…
நாம் : தவிர நாம் வாழ்வில் விரும்பியதை அடையவேண்டும்… என்று நினைப்பவர்களுக்கு உங்கள் டிப்ஸ் என்ன?
திரு.நந்தகுமார் : சாதிக்கவேண்டும் என்று கருதுகிற இன்றைய இளைஞர்கள் பொதுவாகவே அதற்கு நல்ல குடும்பம், நல்ல கல்வி, வசதியான சூழல் இவையெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல… எந்த சூழ்நிலையில் இருப்பவர்களும் சாதிக்கலாம். நிறைய பேர் என்ன நினைக்கிறாங்கன்னா நல்ல ஸ்கூல்ல நல்ல காலேஜ்ல படிச்சா தான் நல்லா வரமுடியும்னு நினைக்கிறாங்க. ரொம்ப நல்ல காலேஜ் என்று பார்த்தால் தமிழ் நாட்டிலேயே மொத்தம் ஒரு பத்து காலேஜ் தான் இருக்கும். அதுல படிக்கிறவங்க தான் நன்றாக வர முடியும் என்று நினைத்தால் அது மூட நம்பிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.
நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நீங்க என்னவாக நினைக்கிறீங்களோ அது தான் ஆவீங்க. நீங்க எங்கே இருக்குறீங்க என்பது முக்கியமில்லை. என்னவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுவே முக்கியம்.
ரொம்ப நல்ல காலேஜ் என்று பார்த்தால் தமிழ் நாட்டிலேயே மொத்தம் ஒரு பத்து காலேஜ் தான் இருக்கும். அதுல படிக்கிறவங்க தான் நன்றாக வர முடியும் என்று நினைத்தால் அது மூட நம்பிக்கையே தவிர வேறு ஒன்றுமில்லை.விவேகானந்தர் சொன்ன மாதிர், நீங்க எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். So, நம்ம THOUGHTS ரொம்ப முக்கியம்.
சாதிக்க வேண்டும் என்று நீங்கள் களமிறங்கிவிட்டால் சமுத்திரமே பிளந்து உங்களுக்கு வழிவிடுவது போல அனைத்தும் உங்களுக்கு வழிவிடும். ஜெயிக்கவேண்டும் என்கிற சிந்தனை உங்களிடம் வந்துவிட்டால் போதும் அதற்கான சக்தி உங்களிடம் ஆட்டோமேட்டிகாக வந்துவிடும். அந்த எனர்ஜி உங்களுக்குள் FLOW ஆக ஆரம்பித்துவிடும். பிறகு உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களை தேடி வரும்.
சாதிக்க வேண்டும் என்று நீங்கள் களமிறங்கிவிட்டால் சமுத்திரமே பிளந்து உங்களுக்கு வழிவிடுவது போல அனைத்தும் உங்களுக்கு வழிவிடும்."ஜெயிக்கவேண்டும்… ஜெயிக்கவேண்டும்…." என்கிற ரத்தத்தில் ஊறிய இந்த சிந்தைனையே உங்கள் இலக்கில் உங்களை கொண்டு போய் சேர்த்துவிடும். அதாவது மேற்படி பாஸிடிவ் சிந்தனை உங்களை இழுத்துக்கொண்டு போகும் என்று சொல்வதைவிட, தள்ளிக்கொண்டு போகும். (It won't pull you. It will push you!).
நாம் : இதை அனுபவப் பூர்வமாக உணர ஆரம்பித்திருக்கிறேன் சார் நான். அந்த வகையில் உங்கள் வார்த்தைகளே எனக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது.
திரு.நந்தகுமார் : வெரி குட்… வெரி குட்…

நாம் : இந்த சாதனையை நீங்கள் எப்படி நிகழ்த்தினீர்கள் அதற்கு நீங்கள் கையாண்ட வழிமுறைகள் என்ன என்பது பற்றி எங்களிடம் பகிர்ந்துகொண்டால், எங்கள் எல்லோருக்கும் அது ஒரு வழிகாட்டுதலாக அமையும்.
திரு.நந்தகுமார் : வாழ்க்கையில் எதுவும் சாதரணமாக கிடைக்காது. இதெல்லாம் ஒரே ராத்திரியில் நடந்தது அல்ல. பல வருடங்கள் போராட்டத்திற்கு பிறகு தான் சாத்தியமாயிற்று. இலக்கை நிர்ணயிப்பதற்கு மனவுறுதியும், கடினமாக உழைப்பதற்கு விருப்பமும், அதை தொடர்ந்து செயல்படுத்த ஆர்வமும், அது நிறைவேறும் வரை விடா முயற்சியும் அவசியம். இவை எல்லாவற்றையும் நான் கடைபிடித்தேன். வெற்றி சாத்தியமாயிற்று.
நாம் : 6ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை விட்ட உங்களுக்கு இது எப்படி சாத்தியமாயிற்று?
திரு.நந்தகுமார் : இந்த உலகில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை திறமை இருக்கும். அதை அவரவர் சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டால் போதும். என்னிடம் உள்ள தனித் தன்மையை என் பெற்றோரின் உதவியோடு நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது என்னவென்றால் GAINING PRACTICAL KNOWLEDGE IN ACTIVITIES. என் நண்பர்களும், உடன் பணிபுரிந்தவர்களும் கூட இதற்கு உதவினார்கள்.
நாம் : நீங்கள் படித்த காலத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி ஏதாவது? அதாவது மிகப் பெரிய போராட்டம்?
திரு.நந்தகுமார் : நான் வியாசர்பாடியில் உள்ள டாக்டர்.அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தான் என்னுடைய டிகிரி படிப்பை படித்தேன். முதலாம் ஆண்டு தேர்வுக்கு முன்பு எனக்கு அம்மை போட்டுவிட்டது. சுகாதார மற்றும் இதர காரணங்களுக்காக என்னை எக்ஸாம் எழுத அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால் எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி பிரின்சிபால், மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குனர்களை சந்தித்து அவர்களை கன்வின்ஸ் செய்தேன். என்னுடைய மனவுறுதியை பார்த்து அவர்கள் என்னை தேர்வெழுத அனுமதித்தார்கள். ஆனால் தேர்வு எழுதும்போதே நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இரண்டு சப்ஜெக்ட்களில் பெயிலாகிவிட்டேன். கல்லூரி படிப்பில் என்னுடைய முதல் எக்ஸாமே தோல்வியில் தான் ஆரம்பித்தது.
——————————————————————————————————-
Lesson 1 :
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி.
தோல்வி என்ற படிகளில் கால் வைத்துத் தான் வெற்றிக்கான ஏணியில் ஏறிச் செல்ல முடியும்.
——————————————————————————————————-
நாம் : பள்ளிப்படிப்பை நிறுத்தியதற்கு நீங்க வருத்தப்பட்டதுண்டா?
திரு.நந்தகுமார் : 'பல மரம் வெட்டும் தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்று சொல்வதைப் போல, நாம் அனைத்தையும் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் ஒன்றில் கூட கவனம் செலுத்துவதில்லை. பள்ளிப் படிப்பை நிறுத்த நேர்ந்ததற்கு நான் ஒரு வகையில் சந்தோஷமே படுகிறேன். காரணம், அதனால் தான் பல வேலைகளை கற்றுக்கொள்ள முடிந்தது. அவற்றில் எனக்கு அனுபவப் பூர்வமான KNOWLEDGE கிடைத்தது.
உதாரணத்திற்கு நான் ரேடியோ மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, எலக்ட்ரானிக்ஸ் குறித்த அனுபவப் பூர்வமான அறிவு கிடைத்தது. டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்தபோது ஆட்டோமொபைல் பற்றிய அறிவு கிடைத்தது. சித்தாள் வேலை பார்த்தபோது சிவில் என்ஜினீயரிங் பற்றிய அறிவு கிடைத்தது. ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்தபோது பிரிண்டிங் பற்றி தெரிந்துகொண்டேன். இவை அனைத்தும் PRACTICAL KNOWLEDGE என்பது தான இங்கு விசேஷமே. வியாபாரம் பற்றியும் கஸ்டமர்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதையும் நான் லாட்டரி டிக்கெட் விற்றபோது கற்றுகொண்டேன். இவைகளை செய்யும்போது நான் மனமுவந்து சந்தோஷமாக செய்தேன். எந்தக் கட்டத்திலும் இந்த வேலைகளை செய்ய நேர்ந்ததற்கு நான் வருத்தப்பட்டதேயில்லை.
நாம் : இவை உங்களது CIVIL SERVICES தேர்வுக்கு எந்த வகையில் உதவின?
திரு.நந்தகுமார் : என்ன இப்படி கேட்டுடீங்க…. நான் CIVIL SERVICES தேர்வுக்கு தயாரானபோது இந்த PRACTICAL KNOWLEDGE அனைத்தும் எனது THEORITICAL KNOWLEDGE க்கு பக்க பலமாக இருந்தது. தயாராவது சுலபமாக இருந்தது. நான் வெற்றி பெற இது தான் காரணம். மேலும் இந்த CIVIL SERVICES தேர்வு பற்றி எனக்கு தற்செயலாகத் தான் தெரிந்தது. கல்லூரியில் நண்பர்கள் கூறித் தான் தெரிந்துகொண்டேன்.

நாம் : நீங்கள் ஒரு ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.ஆர்.எஸ். ஆபீஸராக வேண்டும் என்று உங்களை மோடிவேட் செய்தவர்கள் யாராவது உண்டா?
திரு.நந்தகுமார் : நான் மாநிலக் கல்லூரியில் POST GRADUATION படித்த போது, பல்லாவரம் ராணுவப் பயிற்சி மையத்தில் லெப்டினென்ட் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டேன். கல்லூரியில் நான் என்.சி.சி.யில் இருந்தது இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சாலை விபத்தில் நான் சிக்கொண்ட படியால், என்னால் அதில் சேரமுடியவில்லை.
இந்நிலையில், நாளிதழ் ஒன்றில் ஒரு பிரபல கல்வி நிறுவனம், UPSC தேர்வுக்கு தயாராவதற்கு நுழைவு தேர்வு ஒன்று வைக்கப்போவதாக அறிந்து அதற்க்கு அப்ளை செய்தேன். நான் அந்த நுழைவு தேர்வை வெற்றிகரமாக எழுதி, இண்டர்வ்யூவுக்கு சென்றேன். ஆனால் நான் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து மூன்றாம் வகுப்பில் (3RD CLASS) தான் பாஸ் செய்திருக்கிறேன் என்று கூறி என்னை நிராகரித்துவிட்டார்கள். என் ஐ.ஏ.எஸ். கனவு இத்துடன் முடிந்தது என்று நினைத்து நான் வருந்திய நேரம், ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு என்றும் அதை மத்திய அரசு நடத்துகிறது என்றும் அந்த தேர்வுக்கு தயாராவதற்கு தான் என்னை நிராகரித்த மேற்படி நிறுவனம் பயிற்சியளிக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். என் நண்பன் ஒருவன் மூலம் இந்த விபரங்களை தெரிந்துகொண்டபின்னர் நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு எனது பயிற்சியை துவக்கினேன்.
இந்த ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதி பாஸ் பண்றதுக்கு முன்னாடி TNPSC EXAM எழுதி அதுல க்ரூப் 2 வேலை கிடைச்சது. சம்பளம் பேசிக் எல்லாம் சேர்த்து ரூ.7000/- இருக்கும், ஆனா, நான் அதை வேணாம்னு விட்டுட்டேன். ஏன்னா, 1986 லயே நான் ஒரு நாளைக்கு லாட்டரி வித்து ரூ.300/- சம்பாதிச்சவன். So, i wanted to achieve something big.
நான் லாட்டரி வேலை பார்த்தப்போவும் சரி, மெக்கானிக் வேலை பார்த்தப்போவும் சரி, ரேடியோ ரிப்பேர், சவுண்ட் சர்வீஸ் வேலை பார்த்தப்போவும் சரி… அந்த வேலைக்கான PRACTICAL KNOWLEDGE தான் எனக்குள்ளே போச்சே தவிர நெகடிவ்வான விஷயங்கள் எதுவும் எனக்குள்ளே போகலே. என்னுடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.
——————————————————————————————————-
Lesson 2 :
செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமை தான் நமது செல்வம்.
——————————————————————————————————-
நாம் : சார்… இந்த ஐ.ஏ.எஸ். மற்றும் UPSC (Union Public Service Commission) பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன். அதற்கு தயாராகவேண்டும் என்று எவராவது விரும்பினால் அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
திரு.நந்தகுமார் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பல தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் முக்கியமானது Combined Civil Service Examination for All India Services (IAS&IPS) & 24 Central Services. இதில் Indian Foreign Service (IFS) & Indian Revenue Service (IRS) அடக்கம்.

நாம் : நீங்கள் ஐ.ஏ.எஸ். பாஸ் செய்தவுடன் முதன்முதலில் இண்டராக்ட் செய்த மறக்க முடியாத வி.ஐ.பி.?
திரு.நந்தகுமார் : நான் இந்த ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணினப்போ எங்க கூட செலக்ட் ஆனவங்க எல்லாரும் ப்ரெஸிடென்ட் கூட ஒரு இண்டராக்ட் நடந்துச்சு. அப்போ என் கூட இருக்குறவங்க எல்லாம் அவங்களை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ, "நான் ஐ.ஐ.டி.ல படிச்சேன். நான் பிட்ஸ் பிலானில படிச்சேன். நான் ஐ.ஐ.எம்.ல படிச்சேன்…." அப்படி இப்படின்னு அறிமுகப்படுத்திகிட்டு அவங்க காலரை தூக்கிவிட்டுக்குறாங்க. அந்த கூட்டத்துல Ph.D பண்ணவங்க மட்டுமே மொத்தம் 28 பேர் இருந்தாங்க. நான் என்னோட முறை வந்தப்போ, எழுந்து நின்னு, "நான் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சவன் சார். 3rd கிளாஸ் GRADUATE" ன்னு நான் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க.
உடனே ப்ரெஸிடென்ட் கேட்டார்… "YOU MEAN DR.AMBEDKAR LAW COLLEGE?" அப்படின்னு. நான் "இல்லே… DR.AMBEDKAR GOVT. ARTS COLLEGE, VYASARPADI"ன்னு சொன்னேன். அவர் ஆச்சரியமா பார்த்தார்.
நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். "ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதுறதுக்கு பெரிசா எந்த QUALIFICATIONS கிடையாது சார். ஏதாவது ஒரு கிராஜூவேஷன் இருந்தாபோதும். பாஸ் பண்றதுக்கு பெரிசா அவங்க EDUCATION BACKGROUND இருக்கா என்றெல்லாம் பாக்குறது கிடையாது. ஐ.ஏ.எஸ். எக்ஸாம் பாஸ் பண்றதுக்கு என்னை மாதிரி ஒரு ORDINARY PROFILE இருக்குறவங்களே போதும். பெரிய PROFILE அவங்களுக்கு இருக்கணும் என்றெல்லாம் அவசியம் இல்லே. அதுவும் இந்த எக்ஸாம்ல நான் ALL INDIA FIRST RANK வந்திருக்கேன்"னு சொன்னவுடனே ரொம்ப ஆச்சரியப்பட்டார் கலாம்.
"நான் கூட இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு பெரிய படிப்பாளியா இருக்கணும்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்" அப்படின்னார். நான், "இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு நாம படிப்பாளியா இருக்கணும்னு அவசியம் இல்லே சார். நம்முடைய அறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துற பக்குவம் இருந்தாலே போதும். இந்த எக்ஸாமை ஈசியா பாஸ் பண்ணிடலாம்"னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு எல்லாரும் ஒரு மாயையை வெச்சிருக்காங்க. அந்த மாயையை உடைக்கணும் என்பது தான் என் ஆசை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சாதிக்கனும்னா ஒரு குறிப்பிட்ட சிலரால மட்டும்தான் முடியும் அப்படின்னு இன்றைய இளைஞர் சமுதாயம் நினைக்கிறாங்க. அது தப்பு. ஒரு விஷயத்தை செய்யனும்னு நினைச்சா செஞ்சிடலாம். அவ்வளவு தான். செய்றதுக்கு என்ன வேண்டும் என்று தான் யோசிக்கவேண்டுமே தவிர, அவனுக்கு மட்டும் கிடைத்துவிட்டதே என்று எவரும் ஆதங்கப்படக்கூடாது. ஏன்னா, கடவுள் நம்ம எல்லாருக்குமே தனித் திறமையை கொடுத்திருக்கிறார்.
——————————————————————————————————-
Lesson 3 : சாதிக்க விரும்புபவன் முதலில் தூக்கியெறிய வேண்டிய குணம் பொறாமை.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். (குறள் 170)
பொருள் : பொறாமைப்பட்டு வளர்ச்சி அடைந்தவரும் இல்லை. பொறாமை இல்லாதவர் வளர்ச்சி குன்றி அழிந்ததும் இல்லை.
——————————————————————————————————-
நாம் : ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகிறவர்க்ளுக்கு உங்கள் டிப்ஸ் என்ன?
திரு.நந்தகுமார் : ஐ.எஸ்.எஸ். தேர்வுக்கென்று மட்டுமே தனிப்பட்ட தயார் முறைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், பொதுவான தேர்வு நடத்துகிறது.
இதில் வெற்றி பெற விரும்புபவர்கள், பிழையின்று படிப்பது, எழுதுவது, பேசுவது உள்ளிட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். இரண்டு விதமான KNOWLEDGE இந்த தேர்வுக்கு அவசியம். ஒன்று Basic Knowledge மற்றொன்று Current Affairs.
நாம் : ஐ.ஆர்.எஸ். ஆகி இப்படி ஒரு உயர்ந்த பதவியில் இருப்பதால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது ? நான் கேட்பது உங்களைப் போன்ற புது புது விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதவி ஒரு தடையாக இல்லையா?
திரு.நந்தகுமார்: அரசுத் துறைகளில் உயர்ந்த இடத்தில் அதிகாரியாக பணிபுரிய ஆர்வமும், துடிப்பும் அவசியம். நீங்கள் எந்த அரசுத் துறையில் பணிபுரிந்தாலும், விரிவான மேலாண்மையும், பணியாளர் நிர்வாகமும், அதிக பட்ச நிதி மேலாண்மையும், முக்கியமாக சூழ்நிலையை திறம்பட நிர்வகிக்கும் மேலாண்மையும் உங்களுக்கு அத்துபடியாகிவிடும்.
ஆனால் எடுத்த எடுப்பில் நான் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வந்து உட்கார்ந்து விடவில்லை. அதற்கு முன்பும், மாநில அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை ஊழியராக அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். உதவி அதிகாரி, பஞ்சாயத் இயக்குனர், கூட்டுறவுத் துறை சப்-ரெஜிஸ்ட்ரார் இப்படிப் பல. உண்மையில் நான் UPSC தேர்வில் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், நான் தேர்ந்தெடுத்தது இந்த ஐ.ஆர்.எஸ். துறை. (INDIAN REVENUE SERVICE).
நாம் : தற்போதுள்ள் துறையில் உங்கள் பணி என்ன?
திரு.நந்தகுமார் : தகுதியுள்ள அனைவரையும் தங்கள் வருமானத்திற்கு சரியான வரிகளை கட்டவைப்பது. காரணம் வரிகளின் மூலம் தான் அரசாங்கங்கள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும்.
நாம் : நீங்கள் பல கல்லூரிகள், மற்றும் பள்ளிகளுக்கு சென்று "வெற்றி நிச்சயம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியிருக்கிறீர்கள். அது மாணவர்களுக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாய் இருந்தது? தனிப்பட்ட முறையில் உங்களிடம் வந்து நன்றி சொன்னவர்கள் யாராவது உண்டா?
திரு.நந்தகுமார் : ஒரு முறை ஒரு பள்ளிக்கு சென்றபோது படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு மாணவன் என்னிடம் வந்து, என் கதையை கேட்ட பிறகு, தான் படிப்பை தொடர விரும்புவதாக கூறினான். கூடவே தன்னுடைய தனித் திறமையான செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தப்போவதாக கூறினான். பின்னர் அவன் மாவட்ட மாநில போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுவிட்டான். தற்போது தேசிய, சர்வேதேச போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறான்.
நாம் : சார்… எவ்ளோ நல்லா விஷயம்…. வாழ்த்துக்கள். நன்றிகள்.

திரு.நந்தகுமார் : அதே போல கும்மிடிபூண்டி அருகே மூன்று பள்ளி மாணவிகள், தாங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகவும், ஆனால் என் கதையை கேட்டபிறகு மூவரும் மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்றதாகவும், தற்போது +1 வகுப்பில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார்கள்.
10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வெழுதும் சென்னை மாநகராட்சியின் 30,000 மாணவ மாணவியருக்கு அவர்களக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொருட்டு தேர்வுக்கு முன்பு அவர்களிடம் உரையாற்றினேன். இதையடுத்து பொதுத்தேர்வில் முதன் முறையாக மாநகாராட்சி பள்ளிகள் வரலாறு காணாத அளவு சாதனைகளை நிகழ்த்தின என்று கூறுகிறார்கள். முதன்முறையாக மொத்த தமிழக சராசரி வெற்றி சதவீதத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகள் முந்தின.
(எழுந்து நின்று கைகளை தட்டுகிறோம்.)
சென்னை மாநகராட்சியின் 30,000 மாணவ மாணவியருக்கு அவர்களக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பொருட்டு தேர்வுக்கு முன்பு அவர்களிடம் உரையாற்றினேன். இதையடுத்து பொதுத்தேர்வில் முதன் முறையாக மாநகாராட்சி பள்ளிகள் வரலாறு காணாத அளவு சாதனைகளை நிகழ்த்தின என்று கூறுகிறார்கள்.நாம் : என்ன சொல்வதென்றே தெரியவில்லை சார்… கேட்கவே சந்தோஷமா இருக்கு. நன்றி… நன்றி… உங்களின் வெற்றியும் அனுபவப் பூர்வமான அறிவும், நாட்டின் நாளைய தூண்களான மாணவர்களுக்கு பயன்பட்டது மிக்க மகிழ்ச்சி.
திரு.நந்தகுமார் : தினமலர் நாளிதழ் பல ஊர்களில் நடத்திய "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன். இதைத் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததால் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் மாவட்ட கலக்டர்களும் எனக்கு நன்றி கூறினார்கள்.
இதைத் தவிர கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு ஒரு விசேஷ ப்ரோக்ராமை வடிவமைத்துள்ளேன். அதற்கு பெயர் Entrepreneur Development Programme (EDP) அதாவது "தொழில் முனைவோர் முன்னேற்ற திட்டம்". இதன் குறிக்கோள் வாழ்க்கையில் உயர்ந்தவற்றை நினைத்து அந்த குறிக்கோளை அடைய முற்படுவதே.
நாம் : நாட்டின் இன்றைய தேவை இளைஞர்களுக்கு இது போன்ற வழிகாட்டுதல்கள் தான் சார்.
நாம் : உங்கள் குடும்பத்தினர் பற்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் லட்சியத்துக்கு எந்தளவு உறுதுணையாக இருந்தார்கள்?
திரு.நந்தகுமார் : என் அம்மா மல்லிகா. அவர்கள் தான் என் முயற்சிகளில் நான் தோல்வியுறும் போதேல்லாம் என்னை தட்டிக்கொடுத்து என் கண்ணீரை துடைத்தது. அடுத்து என் தந்தை வீரமணி. வாழ்க்கையை புரிந்துகொள்ள கற்றுக்கொடுத்தவர் அவர். என்னுடைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
நாம் : உங்கள் மனைவி உங்கள் லட்சியத்தில் எந்தளவு துணை நின்றார்?
திரு.நந்தகுமார் : என் மனைவி விஜயலக்ஷ்மி நான் என் இலட்சியத்தில் வெற்றி பெற மிகவும் உறுதுணையாக இருந்தார். என்னை தனிப்பட்ட முறையில் நன்கு கவனித்து கொண்டார்.
நாம் : உங்கள் உடன் பிறந்தவர்கள்?
திரு.நந்தகுமார் : என்னுடைய சகோதரி ராணி மற்றும் ராதா. அப்புறம் சகோதரர் சாக்ரடீஸ். இவர்கள் அனைவரும் நான் பள்ளிப் பருவ காலத்தில் படிப்பை நிறுத்திய போது எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பாதையை செப்பநிட்டதில் பங்குண்டு.
நான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.
நான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள். நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.நாம் : கிரேட் சார். அப்போ… உங்க குடும்பத்தினருக்கே நீங்க ஒரு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கீங்க.
நாம் : உங்களுடைய இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் ஏதாவது அவமானத்தை சந்தித்திருக்கிறீர்களா? உனக்கெல்லாம் என்ன படிப்பு வேண்டி கிடக்கு என்பது போன்ற கேள்விகளை சந்தித்திருக்கிறீர்களா ?
திரு.நந்தகுமார் : அதெல்லாம் டெய்லி உண்டு. நிறைய இன்சிடென்ட்ஸ் இருக்கு. யாராவது ஒரு விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று என்னிடம் கூறினால், நான் அதை செய்துகாட்ட முற்படுவேன். இது ஏதோ வீராப்புனால கிடையாது. முதல்ல, அவங்க ஏன் முடியாதுன்னு சொல்றாங்க என்பதன் காரணத்தை ஆராய்ந்து அதை முதலில் கண்டுபிடிப்பேன். ரெண்டாவது அது என்னால முடியும்னு நான் நினைச்சா அதை செய்றதுக்கு என்ன தகுதிகளை நான் வளர்த்துக்கொள்ளவேண்டும்? என்று யோசிப்பேன். மூன்றாவது அதற்கு எனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு அந்த செயலை முடிப்பதற்கான பணிகளில் இறங்குவேன்.
என்னை அவமானப்படுத்த அவர்கள் கூறும் விஷயத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அதை முடித்துகாட்ட நான் முயற்சிப்பேனே தவிர, அப்படி கூறுபவர்களை திரும்ப திட்டுவதோ, அவர்களை பழிவாங்க முற்படுவதோ உள்ளிட்ட எதையும் நான் செய்ய மாட்டேன். அதே போல, ஜெயித்த பிறகு, "இதோ பார் நான் ஜெயிச்சு காண்பிச்சுட்டேன்" என்று அவர்கள் முன்னாள் போய் நின்று மார்தட்டும் எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை.
நாம் : சாதிக்க கிளம்புபவர்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய வைர வார்த்தைகள் சார் இவை….
——————————————————————-
Lesson 4 : பழிவாங்கும் எண்ணம் தவறு!——————————————————————-
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. (குறள் 157)
பொருள் : பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
நமக்கு என்ன நடக்கிறதோ அது வாழ்க்கையல்ல… அப்படி நடப்பவற்றுக்கு எப்படி ரீயாக்ட் செய்கிறோம் என்பதே வாழ்க்கை. தன்னை இகழ்ந்தவர்களை இவர் பதிலுக்கு பதில் என்ற ரீதியில் செயல்பட்டிருந்தால், நிச்சயம் இன்று ஐ.ஏ.எஸ். பாஸ் செய்து, இப்படி ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டார். இவர் கவனம் அனைத்தும் அவர்களுக்கு பதிலடி கொடுப்பது பற்றியே போயிருக்கும்.
——————————————————————-
நாம் : நீங்கள் வளரும்போது உங்களை ஏளனப்படுத்தியவர்களை நீங்கள் வளர்ந்து ஆளான பிறகு தற்செயலா பார்த்த சந்தர்ப்பம் ஏதாவது உண்டா?
திரு.நந்தகுமார் : நிறைய உண்டு. நான் மெக்கானிக் ஷெட்ல இருந்து ப்ரைவேட்டா படிக்க ஆரம்பிச்சப்போ எங்க ஏரியாவுல இருக்குற ஒருத்தரு கிட்டே அட்டஸ்டேஷன் வாங்க போவேன். அவர் ஒரு GAZETTED OFFICER. அவரோட பசங்க கொஞ்சம் அப்படி இப்படி rough & tough ஆ இருப்பாங்க. நம்மளை ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. நான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் ஐ.ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன். அவர், "வாங்க சார்…. வாங்க சார்….எப்படி இருக்கீங்க…." அப்படின்னு கேட்டுட்டு… அவர் பசங்களை, "டேய் நந்தகுமார் சார் வந்திருக்கார்… வாங்கடா" அப்படின்னு கூப்பிட்டார். என்னை வாடா…போடான்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தவர் திடீர்னு… "வாங்க சார்… போங்க சார்"னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப ODD ஆ இருந்தது. "சார் நீங்க எப்பவும் போலவே என்னை வாடா… போடா"னு கூப்பிடுங்க. சார்னெல்லாம் கூப்பிடாதீங்க. எனக்கு என்னவோ போலிருக்கு"ன்னேன்.
நான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் ஐ.ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன்.
"நீங்க வேற… சும்மாயிருங்க சார். என் பசங்களோட ஃபியூச்சருக்கு நீங்க தான் சார் அவங்களை கைட் பண்ணனும்" அப்படின்னு சொல்லி, அவங்களுக்கு என்னை ஐ.ஏ.எஸ். கோச்சிங் கொடுக்கச் சொன்னார்.
நாம் : வாரே… வா… செம இண்டரெஸ்டிங் சார்…. இதைத் தவிர வேற ஏதாவது சுவாரஸ்யமான சம்பவம்?
திரு.நந்தகுமார் : நான் சிவில் சர்வீசஸ் (IAS) எக்சாம்ல பாஸ் பண்ணினதுக்கப்புறம், நான் இருந்த ஏரியாவுல, அங்கேயிருந்த ஒரு அசோசியேஷன் சார்பா எனக்கு பாராட்டு விழா ஏற்பாடாகியிருந்தது. அங்கே லோக்கல்ல இருக்குற கல்யாண மண்டபத்தை இதுக்காக புக் பண்ணியிருந்தாங்க. பங்க்ஷன் அன்னைக்கு மதியம் நான் அந்த மண்டபத்தை பார்க்க போயிருந்தேன். அந்த பங்க்ஷனுக்காக அங்கே சவுண்ட் சர்வீஸ் பண்ணிகிட்டுருந்தது யார்னா… நான் எந்த சவுண்ட சர்வீஸ்ல யார்கிட்டே வேலை பார்த்துகிட்டுருந்தேனோ அவர் தான். அவருக்கு நான் Post Graduation வரைக்கும் முடிச்சிட்டு I A S Exam பாஸ் பண்ணின விபரமோ அங்கே பாராட்டு விழா எனக்குத் தான் நடக்கப்போகுதுன்னோ தெரியாது.
அவரைப் பொருத்தவரைக்கும் நான் அவரோட பழைய எடுபிடி தான். என்னை பார்த்தவுடனே கூப்பிட்டு, "கொஞ்சம் அந்த கம்பத்துல ஏறி இந்த ஸ்பீக்கரை கட்டு. அதுல எறி வயரை மாட்டு"ன்னு வேலை வாங்க ஆரம்பிச்சிட்டார். நானும் மறுப்பேதும் சொல்லாம அவர் சொன்ன வேலைகளை எல்லாம் செஞ்சேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலே, அங்கே இருந்து அவர் சவுண்ட் சிஸ்டம் செட் பண்றதுக்கு எல்லா ஹெல்ப்பும் செஞ்சிட்டு, "நான் போயிட்டு வர்றேண்ணே"ன்னு சொல்லிட்டு சைலண்ட்டா கிளம்பி வந்துட்டேன்.நாம் : வாரே… வா… செம இண்டரெஸ்டிங் சார்…. இதைத் தவிர வேற ஏதாவது சுவாரஸ்யமான சம்பவம்?
திரு.நந்தகுமார் : நான் சிவில் சர்வீசஸ் (IAS) எக்சாம்ல பாஸ் பண்ணினதுக்கப்புறம், நான் இருந்த ஏரியாவுல, அங்கேயிருந்த ஒரு அசோசியேஷன் சார்பா எனக்கு பாராட்டு விழா ஏற்பாடாகியிருந்தது. அங்கே லோக்கல்ல இருக்குற கல்யாண மண்டபத்தை இதுக்காக புக் பண்ணியிருந்தாங்க. பங்க்ஷன் அன்னைக்கு மதியம் நான் அந்த மண்டபத்தை பார்க்க போயிருந்தேன். அந்த பங்க்ஷனுக்காக அங்கே சவுண்ட் சர்வீஸ் பண்ணிகிட்டுருந்தது யார்னா… நான் எந்த சவுண்ட சர்வீஸ்ல யார்கிட்டே வேலை பார்த்துகிட்டுருந்தேனோ அவர் தான். அவருக்கு நான் Post Graduation வரைக்கும் முடிச்சிட்டு I A S Exam பாஸ் பண்ணின விபரமோ அங்கே பாராட்டு விழா எனக்குத் தான் நடக்கப்போகுதுன்னோ தெரியாது.
சாயந்திரம், பங்க்ஷன் அட்டென்ட் பண்ண மண்டபத்துக்கு வந்தேன். என்னை பார்த்துட்டு, "இங்கே எங்கேடா வந்தே?"ன்னு கேட்டார். "சும்மா பார்க்கலாம்ன்னு வந்தேன் அண்ணே" னு சொன்னேன்.
பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகும்போது நான் மேடையில போய் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்துல அவருக்கு புரிஞ்சிடிச்சு பாராட்டு விழாவே எனக்குத் தான்னு. அவருக்கு கையும் உடலே. காலும் உடலே. தவிக்கிறார். பங்க்ஷன் முடிஞ்சப்புறம் என் கிட்டே வந்து "சாரி…சார்… உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……!!" அப்படின்னார் ரொம்ப சங்கடப்பட்டுகிட்டு.
"சாரி…சார்… உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……!!""எப்பவும் போலவே என்னை வாடா… போடான்னே கூப்பிடுங்க. பரவாயில்லே. சார்னு மட்டும் கூப்பிடாதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று அவரிடம் சிரித்தபடி சொல்லிவிட்டு வந்தேன்.
இதுபோல நிறைய உண்டு.

(Presenting Rajini's Punchtantra book to Mr.Nandakumar)
நாம் : அடிப்படையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்க ளைப் பற்றிய தளம் இது என்பதால் ஒரு கேள்வி…சூப்பர் ஸ்டார் ரஜினி பத்தி உங்களோட அபிப்ராயம்?
திரு.நந்தகுமார் : ரஜினி, எம்.ஜி.ஆர். படங்களாகட்டும், பாடல்களாகட்டும், நிறைய பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கு. அவங்களுக்குள்ளே இருக்குற டாலன்ட்டை அவர் படங்கள் கிளறிவிடும்.
அவர் படங்கள்ல எனக்கு 'தர்மதுரை' ரொம்ப பிடிக்கும். அதல வர்ற "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன" ஸாங், ரொம்ப பிடிக்கும். அப்புறம் 'ஆறிலிருந்து அறுபது வரை', படம்… ரியல்லி எ வொண்டர்புல் மூவி. INSPIRING ONE. சாதரணமா இருந்து பெரிய ஆள் ஆகுற அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய படங்கள் சொல்லிகிட்டே போகலாம். உண்மையில் ரஜினி ஒரு மிகப் பெரிய INSPIRING PERSONALITY. ஆனால் அதை ஆக்கப்பூர்வமா எடுத்துக்கணும். அவர் நடிப்பது ஒரு படம் என்று மட்டும் நினைக்காமல், அதை ஒரு ஆளுமை விஷயமா நினைச்சி அந்த VALUES ஐ நமக்குள்ளே கொண்டு போகணும். அப்போ என்னாகும்னா நீங்களும் ஒரு பெரிய ஆளா வருவீங்க. அதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
உண்மையில் ரஜினி ஒரு மிகப் பெரிய INSPIRING PERSONALITY. ஆனால் அதை ஆக்கப்பூர்வமா எடுத்துக்கணும். அவர் நடிப்பது ஒரு படம் என்று மட்டும் நினைக்காமல், அதை ஒரு ஆளுமை விஷயமா நினைச்சி அந்த VALUES ஐ நமக்குள்ளே கொண்டு போகணும். அப்போ என்னாகும்னா நீங்களும் ஒரு பெரிய ஆளா வருவீங்க.நாம் : ரஜினி உங்களை எந்த வகையிலாவது இன்ஸ்பையர் பண்ணியிருக்கிறாரா?
திரு.நந்தகுமார் : அவர் நடிப்பு க்ரியேட் பண்ற அந்த இன்ஸ்பிரேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாதிப்பை எனக்கு வேறு எந்த நடிகரும் ஏற்படுத்தியதில்லை. அவர் ஒரு படத்துல நம்மை அழவைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நானும் அழுதுவிடுவேன். ஒரு எதிரியை பழிவாங்குகிறார் என்றால் நானும் என் எதிரியை பழிவாங்கியது போல உணர்வேன். ஒரு காமெடிக் காட்சியில் நடிக்கிறார் என்றால் நானும் அதில் லயித்துப் போய் சிரிப்பேன். அந்தளவு அவர் என்னை INSPIRE பண்ணியிருக்கிறார். அவருடைய பல படங்கள் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. பொதுவாக எல்லா நடிகர்களையும் நான் ரசித்திருக்கிறேன். ரஜினி சாரை மட்டும் அதிகமாக ரசித்திருக்கிறேன்.
நாம் : அவர் படங்கள்ல உங்களுக்கு பிடிச்ச பாட்டு….. inspirational songs?
திரு.நந்தகுமார் : 'பாட்ஷா'வுல வர்ற "எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையை பிரிச்சிக்கோ", 'முத்து'ல வர்ற "ஒருவன் ஒருவன் முதலாளி", 'அண்ணாமலை' "வந்தேண்டா பால்காரன்" இந்த சாங்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல பார்த்தீங்கன்னா…. இந்த "வந்தேண்டா பால்காரன்" பட்டை என்னோட காலர் டியூனாவே நான் வெச்சிருந்தேன். நிறைய பேர் கேட்டாங்க… "ஒரு டெபுடி கமிஷ்னரா இருந்துகிட்டு இந்த பாட்டை வெச்சிருக்கீங்க?" ன்னு. என்னோவோ தெரியலே… அந்த ஸாங்கை கேட்கும்போதே எனக்கு VIBRANT ஆ இருக்கும். அந்த பட்டுள்ள ஒரு ENTHU இருக்கும். அப்படி ஒரு எனர்ஜிடிக் பாட்டு அது. தவிர அர்த்தமுள்ள பாட்டும் கூட. அது ஒரு SYMPHONY MUSIC.
'அண்ணாமலை' "வந்தேண்டா பால்காரன்" இந்த சாங்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல பார்த்தீங்கன்னா…. இந்த "வந்தேண்டா பால்காரன்" பாட்டை என்னோட காலர் டியூனாவே நான் வெச்சிருந்தேன். நிறைய பேர் கேட்டாங்க… "ஒரு டெபுடி கமிஷ்னரா இருந்துகிட்டு இந்த பாட்டை வெச்சிருக்கீங்க?" ன்னு. என்னோவோ தெரியலே… அந்த ஸாங்கை கேட்கும்போதே எனக்கு VIBRANT ஆ இருக்கும். அந்த பட்டுள்ள ஒரு ENTHU இருக்கும். அப்படி ஒரு எனர்ஜிடிக் பாட்டு அது. தவிர அர்த்தமுள்ள பாட்டும் கூட.இந்த பாட்டை நிறைய இடங்கள்ல நான் பாடியிருக்கேன். By the way, நான் நல்லா பாடுவேன்.
நாம் : இது புது விஷயமா இருக்கே.. எந்த மாதிரியான சிச்சுவேஷன்கள்ல பாடுவீங்க?
திரு.நந்தகுமார் : என் நண்பர்களோட திருமணத்துக்கோ அவங்க வீட்டு விஷேஷத்துக்கோ போனா, என்னை பாடச் சொன்னா அங்கே இந்த ஸாங்கை பாடுவேன்.

நாம் : எங்கள் தள வாசகர்களுக்கு இறுதியாக உங்கள் மெசேஜ் என்ன?
திரு.நந்தகுமார் : WHAT YOU THINK YOU BECOME
நாம் : வொண்டர்ஃபுல் சார்…. இதைத் தான் சார் ரஜினி சார் தன்னை சந்திக்கிறவங்க கிட்டேயெல்லாம் சொல்றாரு.
திரு.நந்தகுமார் : அப்படியா…. வெரி நைஸ்…
நாம் : தன்னை சந்திக்கும் முக்கியஸ்தர்களுக்கு ரஜினி தன்னுடைய குட்டி சிலை ஒன்றை பரிசளிக்கிறார். அதன் கீழே நீங்கள் கூறியே இதே வார்த்தைகள் தான இருக்கும். WHAT YOU THINK YOU BECOME. (நாம் பேட்டிக்கு சென்ற ஒரு முக்கியஸ்தரின் டேபிளில் ரஜினி அவருக்கு பரிசளித்த மேற்படி சிலையை புகைப்படத்தில் மேலே பாருங்கள்.) ஒரு மாபெரும் சாதனையாளரான நீங்கள் கூறும் வார்த்தைகளும் எங்கள் தலைவர் எங்களுக்கு கூறும் வார்த்தைகளும் ஒன்றாக இருப்பது அதிசயம் சார்.
இதிலிருந்து ஒன்றே ஒன்று மட்டும் தெரிகிறது… வெற்றியாளர்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள் போல. மேலும், ரஜினி சார் கூறும் அறிவுரைகளை கேட்டு அவரது வார்த்தைகளின் படி நடந்தாலே போதும்… ஒருவர் சாதனையாளராகி விடலாம் என்பதும் புரிகிறது…திரு.நந்தகுமார் : நிச்சயமா சுந்தர்… அதில் சந்தேகமேயில்லை. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய். வெற்றியாளர்களை இன்ஸ்பிரேஷனா எடுத்துகோங்க. ஆனா கம்பேர் பண்ணிக்காதீங்க. பண்ணா என்ன ஆகும்னா… நான் அவரை மாதிரி வரமுடியல்; இவரை மாதிரி வர முடியலே… அப்படின்னு சொல்வோம். So, நீங்க என்னவாக விரும்புறீங்க என்பது தான் முக்கியம். என்னவாக விரும்புறீங்கன்னு முடிவு செஞ்ச பிறகு, அதற்க்கான ஒரு துறையை தேர்ந்தெடுங்க. பின்னர் அதற்கான திறமையை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சாதனைக்கான நேரத்தை நீங்களே தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு வருஷத்துல ஆயிட்டாரேன்னோ… இவர் ரெண்டு வருஷத்துல ஆயிட்டாரேன்னோ கம்பேர் பண்ணிக்க கூடாது. உங்களுக்கு ரெண்டு வருஷம் ஆகும் என்றால் தாராளமாக ரெண்டு வருஷம் எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதுவாக ஆவீர்கள்.
நீங்க என்னவாக விரும்புறீங்க என்பது தான் முக்கியம். என்னவாக விரும்புறீங்கன்னு முடிவு செஞ்ச பிறகு, அதற்க்கான ஒரு துறையை தேர்ந்தெடுங்க. பின்னர் அதற்கான திறமையை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சாதனைக்கான நேரத்தை நீங்களே தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள்.நாம் : எங்களுக்காக உங்க பொன்னான நேரத்தை ஒதுக்கி உங்களோட அனுபவ முத்துக்களை எங்க கிட்டே ஷேர் பண்ணிகிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்.
திரு.நந்தகுமார் : எல்லா விஷயமும் எல்லாருக்கும் ரீச் ஆவதில்லை. அப்படியிருக்கும்போது என்னோட இந்த அனுபவங்கள், நெட்ல இருக்குறவங்க கிட்டே ரீச் ஆச்சுன்னா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் பரவும். அதுவே எனக்கு போதும். அந்த வகையில் இது நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி.
நாம் : எனக்கு உங்களோட வாழ்த்துக்கள் ஆசிகள் வேண்டும் சார்….
திரு.நந்தகுமார்: நிச்சயமா. WHAT YOU THINK YOU BECOME.

நாம் : என் வாழ்க்கை பயணத்தில் இனி நீங்களும் என்னுடன் இருப்பீர்கள், என்னை அவ்வப்போது என் இலக்கை அடைய உற்சாகப்படுத்துவீர்கள் என்பது நிச்சயம். அது தவிர, எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு என் இலக்கை எட்டிய பின்னர் மீண்டும் ஒரு முறை உங்களை சந்திப்பேன்.
திரு.நந்தகுமார்: ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்.
நாம் : உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இருந்தால் 'கடவுள் இருக்கிறார்' என்று உங்களை பரிபூரணமாக நம்பவைப்பது எது? உங்கள் சொந்த அனுபவத்தில்?
திரு.நந்தகுமார்: கடவுள் நம்பிக்கை நிச்சயம் உண்டு. எப்படின்னா…. 6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தியதால், நான் எப்படி வேண்டுமானாலும் போயிருக்க வாய்ப்புண்டு. அந்த பருவங்களில் ஒரு சிறிய கெட்டப் பழக்கம் என்னிடம் வந்திருந்தால் கூட என் வாழ்க்கை திசை மாறி போயிருக்க வாய்ப்புண்டு. ஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடக்காமல் என்னை கட்டுப்பாட்டோடு இருக்கவைத்து இன்று இந்த சேரில் உட்காரவைத்திருக்கிறான் இறைவன். அந்த வகையில் ஆண்டவனுக்கு நான் ஒவ்வொரு கணமும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நாம் : கடல் நடுவே கடும் புயலில் மாட்டிக்கொண்ட ஒரு சாதாரண பாய் மரக்கப்பல் பத்திரமாக கரை சேர்வது என்பது மனிதன் கைகளில் மட்டும் இல்லையே. அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
திரு.நந்தகுமார் : Very true. "கடவுளை வணங்கு ஆனால் உன் சம்மட்டியை நிறுத்தாதே!!" மற்றவற்றை அவன் பார்த்துக்கொள்வான்.
[END]
The following Padayappa song is dedicated to Nandakumar sir as it reflects his own life.
Singa Nadai Pottu – Padayappa Song
————————————————————————————-
Source:
Part 2 @ http://onlysuperstar.com/?p=15376
Please check Part 1 @ http://onlysuperstar.com/?p=15220
————————————————————————————-
No comments:
Post a Comment