ஃபுட்கிங் சரத்பாபு ஏழுமலை தனது அம்மா தீபா அவர்களை பற்றி......
''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு,
அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப
பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன்.
அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை
வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட
முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு
இருக்காங்க.
ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி
போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய்
சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள்
வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த
கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா
நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா,
குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா
ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல
பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு
கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும்
கொடுத்திருக்கேன்.
பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன
இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப்
புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான்
டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன்
சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன
பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..?
இந்தியாவில் பசியால் எத்தனையோ பேர் வாடுகின்றனர். அதை நான் நன்றாக
உணர்ந்ததால் பசி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம் என்னுள்
ஏற்பட்டது. இதன் காரணமாக, "ஹங்கர் ஃப்ரீ இந்தியா பவுண்டேஷன்' எனும்
அமைப்பைத் தொடங்கியுள்ளேன். இந்த அமைப்பு மூலம் இளம் விதவையர், கணவரால்
கைவிடப்பட்டோரின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு
உணவளிப்பது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வரு வருடம்
பத்தாவது மாதமான அக்டோபர் 10-ம் தேதியன்று எங்களால் முடிந்தளவுக்கு சில
ஆயிரம் பேரின் பசியை "ஹங்கர் ஃப்ரீ இந்தியா பவுண்டேஷன்' எனும் அமைப்பின்
மூலம் பறந்தோடச் செய்கிறோம். கடந்த ஆண்டு கோவா, நாக்பூர், ஹைதராபாத்,
சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் வாழும் ஆதரவற்றோருக்கு உணவு
அளித்தோம்'' என்றார் சரத்பாபு.
அது சரி. யார் இந்த சரத்பாபு ?
- இவர் பிறந்தது மடிபாக்கம் அருகே உள்ள ஒரு சேரியில்
- அம்மா தெருவோர இட்லி கடை வைத்து இவரைப் படிக்க வைத்தார்
- இவர் படித்தது B.Tech in BITS (Pilani) & MBA in IIM Ahmedabad.
- http://en.wikipedia.org/wiki/Sarathbabu_Elumalai
இப்போ நம்ம நந்தகுமார் (IRS) சொன்னதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
"எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்னவாக நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்!"
''என்னோட சின்ன வயசில எங்க அம்மா சாப்பாடு வேணாம்டானு சொல்லிட்டு, அடிக்கடி தண்ணி குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. 'தண்ணின்னா அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு'னு சின்னப் பையன் நானும் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது, இட்லி கடையில் கிடைக்கிற வருமானத்தை
வச்சு அம்மா, நான், ரெண்டு அக்கா, ரெண்டு தம்பினு ஆறு பேர் எப்படி சாப்பிட முடியும்? அதான் எங்க அம்மா தண்ணீரை குடிச்சே வயித்தை நிறைச்சுட்டு இருக்காங்க.
ஆனாலும் என் வயித்துக்கும், அறிவுக்கும் பட்டினி போடாம நல்லா படிக்க வச்சாங்க. படித்து முடிச்சதும் பல லட்ச ரூபாய் சம்பளத்துக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. எங்க குடும்பம் பட்டிருந்த கடனை அடைக்க ஒரு கம்பெனியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். பிறகு, அம்மா நடத்தி வந்த அதே இட்லி கடையை நடத்த ஆரம்பிச்சேன். தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி பதினாறு அடி பாய்ஞ்சு ஆகணுமில்லையா? அதனால கடைய கொஞ்சம் பெரிசா ஆரம்பிச்சேன். சென்னை, கோவா, பிலானி, ஹைதராபாத்னு பல ஊர்கள்ல இருக்கும் பல பல்கலைக்கழக கேன்டீன்களை இப்ப நடத்திக்கிட்டு இருக்கேன். வருஷத்துக்கு ஏழு கோடி ரூபாய் புழங்கும் இந்த பிசினஸ் மூலமா சுமார் 250 பேருக்கு வேலையும் கொடுத்திருக்கேன்.
பணம் எந்த விதத்துலயும் என்னை மாத்திடலை. முன்ன இருந்த அதே மடிப்பாக்கம் ஏரியா வீட்லதான் இப்பவும் இருக்கேன். சின்னப் புள்ளையில இருந்து பாத்துப் பழகின மாமா பொண்ணைத்தான் கட்டிக்கிட்டேன். நான் டாக்டர் கிடையாது. ஆனா, ஸ்கூலுக்கு போற ஒரு பையனை பார்த்தாலே அவன் சாப்பிட்டிருக்கானா இல்லையான்னு கண்டுபிடிச்சுடுவேன். கண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம். அவன் சாப்பிட ஏதாவது வழி செய்யணுமில்லையா..?
இந்தியாவில் பசியால் எத்தனையோ பேர் வாடுகின்றனர். அதை நான் நன்றாக உணர்ந்ததால் பசி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம் என்னுள் ஏற்பட்டது. இதன் காரணமாக, "ஹங்கர் ஃப்ரீ இந்தியா பவுண்டேஷன்' எனும் அமைப்பைத் தொடங்கியுள்ளேன். இந்த அமைப்பு மூலம் இளம் விதவையர், கணவரால் கைவிடப்பட்டோரின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு உணவளிப்பது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வரு வருடம் பத்தாவது மாதமான அக்டோபர் 10-ம் தேதியன்று எங்களால் முடிந்தளவுக்கு சில ஆயிரம் பேரின் பசியை "ஹங்கர் ஃப்ரீ இந்தியா பவுண்டேஷன்' எனும் அமைப்பின் மூலம் பறந்தோடச் செய்கிறோம். கடந்த ஆண்டு கோவா, நாக்பூர், ஹைதராபாத், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் வாழும் ஆதரவற்றோருக்கு உணவு அளித்தோம்'' என்றார் சரத்பாபு.
இப்போ நம்ம நந்தகுமார் (IRS) சொன்னதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
"எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்னவாக நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்!"

No comments:
Post a Comment