பாகிஸ்தானில் அரசு & உச்ச நீதிமன்றம் மோதல்: விபரீதமாகும் தலையீடு
பாகிஸ்தானில் அரசு & உச்ச நீதிமன்றம் மோதல் உச்ச கட்டத்தை எட்டுகிறது. அதிபர் சர்தாரி மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை பிரதமர் கிலானி ஏற்க மறுத்ததால் அவரது பதவியை நீதிமன்றம் பறித்தது. இப்போது அஷ்ரப் பிரதமர். எங்கள் உத்தரவுக்கு என்ன பதில் என்று வியாழக்கிழமை பதில் சொல்லுமாறு அவரை நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அஷ்ரபும் பதவி இழக்காமல் தடுக்க அரசு அவசரமாக சட்டம் இயற்றுகிறது. முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக தண்டிக்க முடியாது என்கிறது மசோதா. திங்களன்று மக்களவையில் விவாதமின்றி நிறைவேறிய மசோதா, இன்று அதிகாலை வரை நீடித்த மேலவை கூட்டத்திலும் நிறைவேறி இந்நேரம் சட்டமாக சர்தாரியால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். பதவியில் இருக்கும் அதிபர், கவர்னர் ஆகியோர் மீது வழக்கு தொடர முடியாது என அங்குள்ள அரசியல் சாசனம் கூறுகிறது. அதன்பேரில் கிலானி நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தார். அதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொண்டு அவரை நீதிபதிகள் தண்டித்தனர். இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் அரசியல் சாசனம் எழுத்து வடிவமே பெறாத இங்கிலாந்தின் அரசியல் சாசனத்தை முன்மாதிரியாக கொண்டிருக்கின்றன. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைந்த ஆட்சிக் கட்டமைப்புக்கு தலைவராக விளங்கும் மன்னர் எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தாலும் அவரை மட்டும் நீதிமன்றத்துக்கு இழுக்க முடியாது; அவ்வாறு செய்தால் மொத்த கட்டமைப்பும் அடியோடு சீர்குலைந்து போகும் என்பதால் அந்த ஏற்பாடு.
பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின் பிரிவு 248(2) இதை தெளிவாக கூறுகிறது. சர்தாரி மீது பாய்வதன் மூலம் அந்த சட்டத்தை மீறிய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதமரை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இன்னொரு முக்கிய விதியையும் நசுக்கியிருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை என்பதை சாக்கிட்டு சட்டங்களுக்கு அப்பால் செயல்பட யாருக்கும் உரிமை கிடையாது என்பதை நீதிபதிகள் ஏற்க மறுப்பது ஆச்சரியம். என்னதான் கெட்ட பெயர் இருந்தாலும் சட்டம் இயற்றும் உரிமை அரசியல்வாதிகளுக்குத்தான். அந்த உரிமையில் மற்றவர்கள் தலையிட்டால் விளைவுகள் அனைவரையும் பாதிக்கும்.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment