சாது மிரண்டால் நாடு தாங்காது என்று நிரூபிக்க மன்மோகன் சிங் முடிவு எடுத்துவிட்டார் போலிருக்கிறது. டீசல் விலையை உயர்த்தியதால் உருவான புயல் கரையை கடப்பதற்குள் அடுத்தடுத்த சூறாவளிகளை ஏவியிருக்கிறார். வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் சிங்கிள் பிராண்ட் சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம்; மல்ட்டி பிராண்ட் சூப்பர் ஸ்டோர் திறக்கலாம்; விமான போக்குவரத்து, ஒளிபரப்பு துறைகளில் முதலீடு செய்யலாம்; முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என்று அதிரடியாக பல முடிவுகளை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்திருக்கிறார். எதுவும் புதிய யோசனை அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியிலேயே பேசப்பட்ட திட்டங்கள். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் கடுமையாக ஆட்சேபித்ததால் கிடப்பில் போடப்பட்டிருந்தன. எதிர்பார்த்து காத்திருந்த முதலீட்டாளர்கள் , நுகர்வோருக்கு 'பொறுங்கள், காலம் கனியட்டும்' என்றும்; எதிர்ப்பாளர்களுக்கு 'உங்களை மீறி செய்துவிடுவோமா, என்ன' என்றும் வெவ்வேறு சிக்னல் கொடுத்தபடி போய் கொண்டிருந்த மத்திய அரசு திடீரென்று சிலிர்த்து எழுந்திருக்கிறது. காரணம் என்ன? முறைகேடு புகார்கள் முடிவின்றி வருகின்றன.
பொருளாதார வளர்ச்சி பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. எந்த முடிவும் எடுக்க முடியாத பலவீனமான பிரதமர் என்று ஊடகங்கள் கோரஸ் பாடுகின்றன. அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று கட்சிக்குள்ளேயே முணுமுணுப்பு கிளம்பியது. இதே நிலை தொடர்ந்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு மங்கும்; அதனால் முதலீடுகள் பின்வாங்கலாம் என்று முன்னணி தொழில் நிறுவனங்கள் கவலைப்பட்டன. 'பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். போராடி தோற்றோம் என்ற பெருமையாவது மிஞ்சட்டும்' என்று காங்கிரஸ் மேலிடம் கருதியிருக்கலாம். விளைவாக பிரதமருக்கு வேகத்தடை விலக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தம் மட்டுமே வளர்ச்சிக்கு வழி என்ற நம்பிக்கை இம்மியும் குறையாத மன்மோகன் சிங்கத்தின் பின்னால் காங்கிரஸ் அணி திரண்டிருக்கிறது.எதிரிகளையும் அவர்களைவிட தீவிரமாக எதிர்க்கும் நண்பர்களையும் சமாளித்து சிங் அணி வெற்றி பெறுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment