பள்ளி வாகனங்களுக்கு புதிய விதிகளை தமிழக அரசு வகுத்திருப்பது தாமதமாக இருந்தாலும் வரவேற்க வேண்டிய நடவடிக்கை. ஓட்டை பேருந்தில் பயணம் செய்த சிறுமியின் மரணத்தை தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அரசு 11 விதிகளை வகுத்துள்ளது. டிரைவருக்கு ஐந்தாண்டு அனுபவம் தேவை, அதிவேகம் கவனக்குறைவுக்காக தண்டனை பெறாதவராக இருக்க வேண்டும்; ஓட்டுனர் உடனிருக்க வேண்டும்; முழுமையாக பரிசோதித்த பிறகே உரிமத்தை புதுப்பிக்கவேண்டும் , போன்ற விதிகளை நீதிபதிகள் படித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.பெற்றோர் தரப்பில் 'இந்த விதிகள் போதுமானதல்ல' என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. முதல் காரணம், புதிய விதிகள் பேருந்துகளுக்கு மட்டுமானவை. வேன்கள், ஆட்டோக்கள் மூலமும் ஏராளமான குழந்தைகள் பயணிக்கின்றனர். அந்த வாகனங்களுக்கான அரசு குறிப்புகள் இல்லை. பேருந்து பள்ளியின் பெயரில் இருக்கவேண்டும் என்கிறது ஒரு விதி. மாணவ மாணவிகளை சுமப்பது தவிர இதர ப(ய)ணிகளுக்கு அவற்றை பயன்படுத்த தடை விதிக்கவில்லை. பல பள்ளிகள் சொந்த பேருந்து இயக்குவதைவிட ஒப்பந்த அடிப்படையில் வெளியாரை அனுமதிக்க விரும்புகின்றன. மகாராஷ்டிர அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து 'பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்' வழக்கு தொடர்ந்துள்ளது. அரசின் விதிகள் நடைமுறைக்கு ஒத்துவராது என்று அது மும்பை நீதிமன்றத்தில் வாதிடுகிறது. அநேக நாடுகளில் இந்த பிரச்னை இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு பள்ளி பேருந்து ஆள் ஏற்ற அல்லது இறக்க சாலையோரம் நிறுத்தப்பட்டால், அது கிளம்பும்வரை மற்ற வாகனங்கள் எல்லாம் பின்னால் காத்திருக்க வேண்டும். போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு சைரன் வண்டி எதுவானாலும். எதிர் திசையில் இருந்து சாலையின் மறுபக்கமாக வரும் வாகனங்கள்கூட வேகத்தை 10 கி.மீ என குறைக்க வேண்டும். ஒரே ஒரு குழந்தை உட்காராமல் நின்றாலும் வண்டியை டிரைவர் நிறுத்திவிட வேண்டும்.
அனுமதிக்கப்பட்டதற்கு மேல் ஒரு குழந்தை கூடுதலாக இருந்தாலும் பேருந்தை இயக்கக்கூடாது. எல்லாமே பெரும் தொகை அபராதமாக விதிக்கத்தக்க குற்றங்கள். பள்ளிப் பேருந்து மீது கல் வீசினால் ஒரு வருடம் ஜெயில். உயிருக்கு உரிய மதிப்பளிக்கும் அந்த நாடுகளை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கிறது.
அனுமதிக்கப்பட்டதற்கு மேல் ஒரு குழந்தை கூடுதலாக இருந்தாலும் பேருந்தை இயக்கக்கூடாது. எல்லாமே பெரும் தொகை அபராதமாக விதிக்கத்தக்க குற்றங்கள். பள்ளிப் பேருந்து மீது கல் வீசினால் ஒரு வருடம் ஜெயில். உயிருக்கு உரிய மதிப்பளிக்கும் அந்த நாடுகளை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கிறது.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment