செய்த தவறுக்கு பொதுவாக யாரும் பொறுப்பேற்பதில்லை. பழியை அடுத்தவர் பக்கம் தள்ளி விடுபவர்கள்தான் அதிகம். உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊனமான குழந்தைகள் பிறக்க காரணமாக இருந்த ஒரு மருந்து கம்பெனி, ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் குருநேந்தல். கடந்த 1960ம் ஆண்டு தலிடோமைடு என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. கர்ப்பிணிப் பெண்களின் வாந்தி, மயக்கத்தை தடுத்து நிறுத்தும் மருந்து இது. உலகம் முழுவதும் 50 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத்திரையை சாப்பிட்ட பெண்களுக்கு கை, கால்கள் ஊனத்துடன் குழந்தைகள் பிறந்தன. இப்படி 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள். இந்த பிரச்னையால், அடுத்த ஆண்டே இந்த மருந்து தயாரிப்பை ந¤றுவனம் கைவிட்டது. எதனால் இப்படி ஏற்பட்டது, மாத்திரையில் என்ன பிரச்னை என எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. நிறுவனத்துக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தபோதும் வாயே திறக்கவில்லை. இந்த நிலையில்தான் 50 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்டிருக்கிறார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள மேற்கு ஜெர்மனியின் ஸ்டோல்பெர்க் நகரில் தலிடோமைடு பாதித்தவர்களின் நினைவாக நடந்த கூட்டத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எங்கள் தயாரிப்பான தலிடோமைடு மாத்திரை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் ஊனமாக பிறந்த குழந்தைகளும் எங்களை மன்னிக்க வேண்டும் என உருக்கமாக கேட்டிருக்கிறார். கடைசி வரைக்கும் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என வாதாடாமல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நிறுவனம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம்தான். என்றாலும் இது தங்கள் அவமானப்படுத்துவதாக உள்ளது என கொந்தளிக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
புதிதாக மருந்து, மாத்திரை அறிமுகம் செய்வதற்கு முன்பு, முதலில் எலிகளுக்கும் பின்னர் ஏழை நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கும் கொடுத்து சோதனை செய்வார்கள் (ஆம். அவர்கள் எலிகளை விட சற்றே மேம்ப்பட்டவர்கள்). எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்த பிறகே, விற்பனைக்கு வரும். ஆனால் அதன்பிறகும் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. அப்படி வரும்போது அதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அதுதான் நேர்மை.

நன்றி: Dinakaran
No comments:
Post a Comment