Monday, 31 December 2012

எடியூரப்பா தனிக் கட்சி - உதிரும் பூக்கள்

கர்நாடகாவில் சக்தி வாய்ந்த லிங்காயத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார். தேசிய தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலில் மேலும் ஒரு பிராந்திய கட்சி உருவாகியிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் பாஜ அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. புதுக் கட்சிகள் உருவாவதற்கு பல காரணங்கள். ஒரே கட்சியே இரண்டாய் உடைவது, தேசிய கட்சியை உடைத்து தனியாக கொடி பிடிப்பது என பல ரகங்கள். சாதி பலமும், தொண்டர்கள் ஆதரவும் இருந்தால் கட்சி தொடங்கவும் அடுத்து ஆட்சியை பிடிக்கவும் தைரியம் வந்துவிடும். அதுவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துவிட்டு, அது இல்லாமல் போகும்போது அதை தாங்கிக் கொள்ளவே முடியாது. முதல்வராக இருந்தவர் எடியூரப்பா. கர்நாடகாவில் பாஜ ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர். தன்னால்தான் பாஜ ஆட்சியை பிடித்தது என உறுதியாக நம்புபவர். ஆனால் எந்த தேசிய கட்சியும் பிராந்திய தலைவரால்தான் கட்சிக்கு பலம் என்பதை ஏற்பதில்லை. பாஜவும் அப்படித்தான். அதனால்தான் ஊழல் புகார் எழுந¢த போது, பதவி விலகியவருக்கு அவரின் பலம் தெரிந்தும் மீண்டும் பதவி கொடுக்கவில்லை. தேசிய தலைவர்களுக்கு பிராந்திய அரசியல் நிலைமை புரிவதில்லை. புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இது ஒரு பிரச்னை என்றால், கட்சியே தாங்கள்தான் என பிராந்திய தலைவர்கள் நினைப்பது இன்னொரு பிரச்னை.

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் என சில கட்சிகள்தான் உள்ளன. காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளில் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாய் இருந்து, பிராந்திய தலைவர்கள் வெளியேறியதால் எதிர்க் கட்சியான கதை உண்டு. அதேபோல், காங்கிரசால் முடியாததை காங்கிரசில் இருந்து வெளியேறி சாதித்த தலைவர்களும் உண்டு. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஒரு உதாரணம். இங்கும் மூப்பனார் தமிழ்மாநில காங்கிரசை ஆரம்பித்து, கட்சி நடத்தி மீண்டும் காங்கிரசோடு இணைந்தது தனிக் கதை. மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் உடைந்து, தேசியவாத காங்கிரஸ் உருவானது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரசை உருவாக்கினார். இத்தனைக்கு பிறகும் காங்கிரஸ் இருக்கிறது. இப்போது பாரதிய ஜனதா உடைய ஆரம்பித்திருக்கிறது.




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment