Monday, 31 December 2012

உலக அழிவு - பூமி இன்னும் சுழல்கிறது.

21ம் தேதி வெள்ளிக்கிழமை , 21.12.2012 , அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி ரஷ்யா முழுவதும் டெங்கு வேகத்தில் பரவுவதால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள். உலக அழிவு பற்றி பல நாடுகளில் செய்தி பரவியிருக்கிறது. ரஷ்யா அளவுக்கு மக்கள் நடுங்கவில்லை. தென் அமெரிக்காவின் மாயன் இன மக்களின் காலண்டரை முன்னிட்டு சொல்லப்படும் எத்தனையோ ஆரூடங்களில் ஒன்று பூமியின் அழிவு பற்றியது.சிலைகள், கோயில்கள் என்று இந்தியாவை நினைவுபடுத்தும் பல கலாசார சின்னங்கள் கொண்ட மாயன் நாகரிகம் அழிந்துவிட்டது. தாக்கம் குறையவில்லை. அவர்கள் உருவாக்கிய ஒரு காலண்டர் 5125 ஆண்டுகளுக்கு உரியது. அது 21ம் தேதி முடிவுக்கு வருகிறது. காலண்டரே முடியும்போது மறுநாள் எப்படி விடியும் என்று கேட்கிறார்கள். பேட்டி, கட்டுரை, வரைபடம் என்று ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்குவதால் மக்களுக்கு கிலி பிடித்துள்ளது. ரஷ்ய சிறைகளில் மயான அமைதி நிலவுகிறது. விரோதிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மன்னிப்பு கேட்டு கண்ணீர் வடிக்கிறார்களாம். கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் இல்லை. நிறைய வாங்கி வைத்திருப்பவர்கள் அண்டை வீட்டுக்காரர்களையும் வீடற்றோர் முகாம்களையும் அழைத்து இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள். உலகம் அழியாது என்று அரசு உரத்த குரலில் விடுக்கும் அறிவிப்பு எவர் காதிலும் விழவில்லை. மாயன் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் பெரு, பிரேசில் நாடுகளுக்கு அமெரிக்கர்களை கொண்டுபோய் குவிக்கின்றன சுற்றுலா விமானங்கள். குழந்தைகளும் இளைஞர்களும் இதனால் பிரமை பிடித்து தற்கொலை பற்றி சிந்திக்க தொடங்கியிருப்பதால் மேற்கத்திய அரசுகள் கவலை அடைந்துள்ளன. நாசா விஞ்ஞானிகள் தலையிட்டு உலகம் அழியாது என்று உறுதி அளித்து வருகின்றனர். ராட்சத எரிகல் பூமியை தாக்கி அழிக்கும் என்கிறது ஒரு கோஷ்டி. கடைசியாக ஆறரை கோடி வருடங்களுக்கு முன் அப்படி நடந்தது. டைனோசர்கள் அப்போது அழிந்தன. இப்போதைக்கு சான்ஸ் இல்லை என்கிறது நாசா. பூமிக்கு இந்த சோதனை புதிதல்ல. கடந்த  400,00,00,000 ஆண்டுகளில் அதன் முடிவை பலரும் பல விதமாக கணித்துள்ளனர். கணித்தவர்கள் போய்விட்டார்கள்; பூமி இன்னும் சுழல்கிறது. எவராலும் தடுக்க முடியாததை பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?




நன்றி: Dinakaran 

No comments:

Post a Comment