Saturday, 15 December 2012

16 டிசெம்பர் ஞாயிறு அன்று சென்னை இலயோலா கல்லூரியில் கணினித் தமிழ் மாநாடு

> தோழர்களே, வரும் ஞாயிறு அன்று 16 டிசெம்பர் சென்னை இலயோலா கல்லூரியில் கணினித் தமிழ் மாநாடு நடைபெறுகிறது . இது ஒரு முழு நாள் மாநாடு காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். அடுத்த தலைமுறை தமிழை மின்வடிவில் படிக்க வேண்டும் என்றால் தமிழு
> க்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது . இன்று நாம் செய்யவில்லை என்றால் தமிழ் இனி மெல்லச் சாகும் . அதற்கு நாம் இடம் தரக் கூடாது. கணினியில் இந்திய அரசின் இந்தித் திணிப்பையும் ஆளுமையும் நாம் எதிர்கொள்ள வேண்டும் . தமிழின் ஆளுமையை நிலை நாட்ட வேண்டும் . அதனால் தமிழ் இன, மொழி ஆர்வலர்கள் அவசியம் இந்த மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் . மதிய உணவும் மாநாட்டில் வழங்கப்படும். தொடர்புக்கு 9566224027

No comments:

Post a Comment