நான் படித்து தெரிந்த வரையில் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணிலோ கடலிலோ புதைந்து போன படிமங்கள் மூலம் உருவாகிறது... இந்த படிமங்கள் அந்த இடத்தில் முன்பு இருந்த நிலப்பரப்பை( தற்போது கடலுக்குகடியில் உள்ள நிலம்) சேர்ந்தவைகளாக இருக்கவேண்டும். அவை அங்கு வாழ்ந்த மனிதர்கள், மரங்கள்,விலங்குகள், மற்ற இயற்கை வளங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கப் பெற்ற எண்ணெய் வளம் தானே..

பூமிக்கு ஆற்றல் கிடைப்பது சூரிய ஒளியில் இருந்துதான். Primary source of energy. ஒளி ஆற்றல்தான் பல்வேறு ஆற்றல்களாக உருமாறுகிறது. உலகில் உயிரனங்கள் தோன்றிய யுகத்தில் முதலில் தோன்றியது கடல் வாழ் தாவரங்களே. அவைகள் கடல் நீரில் கரைத்துவிடப்பட்ட நீர்ப் பாசிகள், மிதவியம் போன்ற நுண்ணுயிர்கள் (phyto planktons). By then, ocean water was a primeval soup. அவைதான் கடல் நீரில் சூரிய ஒளி கிடைக்கும் மேல் மட்டத்தில் மிதக்கின்றன. சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை (photosynthesis) மூலமாக எளிய கூறுகளாகிய கார்பன், ஹைட்ரஜன்,நைட்ரஜன் முதையவற்றை இணைத்து சங்கிலித் தொடர் ஹைட்ரோகார்பனாக மாற்றுகின்றன. அந்த சேர்மம் தான் எரிபொருளின் மூலம்.
பெட்ரோலின் சேர்மம் C10H22 . இந்தக் கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையில் பிணைப்பு ஏற்பட உதவிய சூரிய ஆற்றல் தான் அந்த பிணைப்பில் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. எரிபொருள் எரியும் பொழுது அவைகளுக்கு இடையில் உள்ள பிணைப்பு உடைகிறது. அதிலிருந்து ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தாவரங்கள் இறந்ததும் கடலுக்கு அடியில் படிமமாக படிகின்றன. இவ்வாறு கோடிக்கணக்கான கணக்கான ஆண்டுகள் தொடர்கிறது. படிமம் மேல் படிவமாக ஹைட்ரோ கார்பன்கள் குவிகின்றன.
அதே சமயம், பெருநிலத் தட்டுக்கள் (continental plates) இடம் பெயர்கின்றன, ஒன்றோடொன்று மோதுகின்றன, அழுத்துகின்றன, பிரட்டிப் போடுகின்றன. இதனால் கடல் தரையில் இருந்த படிமங்கள் பாறை தட்டுகளுக்கு இடையில் சிக்குகிறது. அழுத்தங்களுக்கு ஆளாகிறது. அழுத்தம் காரணமாக திடமான ஹைட்ரோ கார்பன் தொகுதி உருவாகிறது. அவைதான் பெட்ரோலியமாகவும், அழுத்தத்தில் வெளியாகும் ஆவி எரிவாயுவாகவும் உருப்பெறுகிறது.
அத்தகைய தொகுதி, மேலேயும் கீழேயும் நுண்துளை அற்ற கல் பாறைகளால் (non porous rocks) சூழப் படும்பொழுது, அவை எங்கேயும் கசிந்து செல்ல இயலாது (called Hydrocarbon Traps). இத்தகைய தொகுதிகள் நிறைந்த அடிஆழ நிலப்பரப்பு எண்ணெய் வயல் எனப்படுகிறது. இவை சராசரியாக 3- 4 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும். அவற்றை கண்டுபிடித்து துளையிடும் பொழுது எண்ணெய் ஊற்றாக வெளிவரும். பெரும்பாலான எண்ணெய் வயல்கள் கடலிலோ அல்லது ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டு பின் நிலத்தட்டுப் பெயர்வு ஏற்பட்ட இடத்திலேயே அமையப் பெரும்.
As per law of conservation of energy, energy can neither be created nor be destroyed. It can only be transferred from one form to another. ஒரு விறகை எரிக்கிறோம் என்றால் அது வாழ்த்த காலத்தில் சேமித்த சூரிய சக்தியை வெளியேற்றுகிறோம் என வைத்துக் கொள்ளலாம். அப்படியானால் பலகோடி ஆண்டுகள் சேமித்த ஆற்றல் எத்தன்மையுடன் இருக்கும்? சுருக்கமாக சொல்வதெனில் பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்துவைக்கப்பட்ட சூரிய ஆற்றல்தான் நாம் நினைத்தவுடன் எளிதில் எரித்துப் பயன்படுத்தும் எரிபொருள் !
அதேபோல்தான் நிலத்தில் உள்ள தாவரங்கள் புதைந்து அழுந்தி நிலக்கரியாக மாறுகின்றன. குறுகிய காலத்தில் இத்தகைய ஆற்றல் அனைத்தையும் வெளியேற்றுவதால் ´உலக வெப்பமயமாதல்´ நிகழ்கிறது.
எண்ணெய் வளம் தோன்றிய காலத்தை ஒப்பிடுகையில் மனித குல நாகரீகம் தோன்றி வளர்ந்த காலம் என்பது கண்ணிமைப் பொழுது கைநொடிப் பொழுது. ஆகவே ஒரு இனம் வாழ்த்து பயன்படுத்திய பகுதி எரிபொருள் உருவாக்கத்திற்குக் காரணம் என்பது பொருந்தாது. நவீன யுகத்தில் நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பின் உருவாகியதுதான் நாடு, தேசிய எல்லைகள் எல்லாம்.
ஆகவே தற்போது நமக்கு வகுக்கப்பட்ட , விதிக்கப்பட்ட தேசிய எல்லைகளுக்குள் உள்ள வளங்களையே உரிமை கோர முடியும். வரலாற்றின் அடிப்படையில் அல்லது பூர்வ குடிமக்கள் என்கிற அடிப்படையில் இன்றைய நமது எல்லைக்கு அப்பால் உள்ள கனிம வளங்களைக் கோர முடியாது. எண்ணெய் வளத்தை மையாமாக் கொண்டு எழுகிற சிக்கல்களில் இருந்து மீள்வதே பெரும்பாடு... சிந்தித்து செயல்பட்டால் அதை வேண்டுமானால் செய்யலாம்.
மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழில்புரட்சிக்குப் பின் தான் எரிபொருள் தேவை அதிகமாகி விட்டது. உலக நாடுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முனைகின்றன. அதற்கு எரிபொருள் அத்தியாவசியம் ஆகிறது. அதனை மையமாகக் கொண்டே இன்றைய பூகோள அரசியல் அமைகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக தோன்றி வளர்ந்த கலாசார, நாகரீக பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் இந்த பூகோள அரசியல் என்கிற இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. தமிழர்களாகிய நாமும் இதற்கு விதிவிலக்கல்ல!
நன்றி: ஒரு முகபுத்தக பதிவு
No comments:
Post a Comment