பாகிஸ்தான் பிரதமரை கைது செய்யுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உத்தரவை நிறைவேற்ற வேண்டிய காவல் துறை அரசின் அங்கம். அதனால் பிரதமர் பிழைத்தார். அரசு மீது ராணுவத்தின் நிழல் படர்ந்திருக்கிறது. அது விரும்பாதவரை பிரதமருக்கு காப்பு இல்லை. முன்பு இருந்த பிரதமரும் இதே சூழ்நிலையை சந்தித்தார். நீதிமன்றத்தில் ஆஜரானார். உண்மையில் நாட்டின் அதிபர் மீதான வழக்கில் அவர் பகடைக்காய் ஆனார். அதிபர் மீது நடவடிக்கை எடுக்க அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. அதனால் பிரதமர் தொல்லைக்கு ஆளானார். அதற்கும் முன்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவரை அன்றைய அதிபர் பதவி நீக்கம் செய்ததால் பெரிய போராட்டம் வெடித்தது. அதன் முடிவில் த.நீ மீண்டும் பதவிக்கு வந்தார். அன்று தொடங்கிய அரசு & நீதிமன்றம் மோதல் இன்னும் முடியவில்லை.இலங்கையிலும் தொடங்கி இருக்கிறது. ஷிராணி பண்டாரநாயக தலைமை நீதிபதியாக இருந்தார். அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் ஆளும் கட்சிக்கு கோபம். 117 எம்.பி.க்கள் அவர் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவரை பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியது. அதை ஏற்று அதிபர் ராஜபக்ச ஷிராணியை நீக்கியுள்ளார். நாடாளுமன்றத்தின் தெரிவுக் குழு அதற்கான அதிகாரம் படைத்தது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ராஜபக்ச பொருட்படுத்தவில்லை. பல நாடுகளின் எச்சரிக்கையையும்தான். அவர் இதையெல்லாம் பொருட்டாக நினைப்பதில்லை என்பது நமக்கு தெரியும்தானே.என்றாலும் சில விஷயங்கள் நெருடுகின்றன. ஷிராணி ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டவர் அல்ல. சட்டக் கல்லூரி பேராசிரியராக இருந்தவரை அன்றைய அதிபர் சந்திரிகா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்கினார். தலைமை நீதிபதியாக உயர்த்தியவர் ராஜபக்ச. எனவே இப்போது அவர் நியமித்துள்ள மோகன் பீரிஸ் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவே இருந்ததில்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் எடுபடாது.
பாகிஸ்தானில் அரசு பலவீனம். எனவே அது மண்டியிட வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. இலங்கையில் அரசு வலுவானது. எனவே நீதிமன்றம் தலைவணங்க வேண்டும் என விரும்புகிறது.
பலமிருந்தால் மற்றதெல்லாம் துச்சம்தான்.
பலமிருந்தால் மற்றதெல்லாம் துச்சம்தான்.
நன்றி: Dinakaran
No comments:
Post a Comment