Wednesday, 23 April 2014

Fwd: அருள்கூர்ந்து நூல்களைப் படவடிவக்கோப்பாக்கவும்




நண்பர்களுக்கு வணக்கம்
மேலுள்ள இணைப்பில் உலகஅளவில் பாதுகாக்கப்பட்ட நூல்கள் மற்றும் இதழ்களின் பட்டியல் உள்ளது. பட்டியலில் ஒருங்குறியில் தட்டச்சு செய்து பார்க்கவும். பட்டியலைத் தலைப்பு வழியிலும் அகரவரிசைப்படுத்தலாம். ஒரு பக்கத்திற்கு 25 முதல் 500 எண்ணிக்கையிலானவற்றை ஒரே பக்கத்திலும் பார்க்கலாம். விடுபட்ட இதழ்கள் மற்றும் நூல்கள் இருந்தால் அருள்கூர்ந்து திரட்டவும். உலகஅளவில் இயங்குகிற அனைவரது ஒப்புதலுடன் ஒரு முழுமையான காட்சிப்படுத்துதலைப் பின்வரும் காலங்களில் செய்யலாம். ஆனால் அதற்கு முன் உடைந்து போகிற, நூல்களையும் இதழ்களையும் கண்டறிந்து அவற்றை படவடிவக்கோப்புகளாக்குவது நமது முதன்மையான பணியாக இருக்கட்டும். யார் வேண்டுமானாலும் இந்தப் படவடிவக்கோப்பாக்குதலைச் செய்யலாம். விரும்புகிறவர்களுக்கு ஸ்கைப் வழியாகப் பயிற்சியும் தர விழைகிறேன். அச்சடித்த அந்த நூல் உடைந்து போனால் பிறகு அதனைக் காப்பாற்றவே முடியாது. தனியொருவரிடம் இருக்கும் அந்த நூலை படவடிவக்கோப்பாக்கி வைத்தால் அது அழியாமல் பாதுகாக்கப்படும். எனவே நூல் வைத்திருப்பவர்கள் அதனைப் பாதுகாக்கத் திட்டமிடவும். தமிழம் வலை இணையத்தில் உள்ள மேலுள்ள பட்டியல் - என்பார்வைக்கு வந்தவற்றின் பட்டியல் மட்டுமே. விடுபட்டவை இருக்கலாம். தனித்தனியாக உருவாக்கி வைத்திருக்கும் பட்டியலை படவடிவக்கோப்புடன் அனுப்பினால் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன். ஏன் இந்தப் பட்டியல் ? இந்தப் பட்டியலால் என்ன பயன் ? இது படிப்பவருக்கானது அல்ல. படவடிவக்கோப்பு உருவாக்குபவருக்கானது. உருவாக்கிய நூல்களையே மீண்டும் உருவாக்காமல், நேரத்தை வீணடிக்காது இயங்க இந்தப் பட்டியல் உதவும். பட்டியலில் விடுபட்டவற்றை உருவாக்கத் திட்டமிட்டால் ஒரு நிலையில் தமிழில் வெளியான அனைத்து நூல்களையும் நாம் படவடிவக்கோப்பு ஆக்கி விடலாம். இதற்கான முன்முயற்சியே இந்தப் பட்டியல். நூல் வைத்திருப்பவர்கள் அருள்கூர்ந்து உதவவும். அந்த நூல் ஆக்கியவரை உயிர்ப்பித்து அடுத்த பல தலைமுறையினருக்கும் காட்சிப்படுத்தலாம். படவடிவக்கோப்பாக்காது வைத்து இருந்தால் 70 - 100 ஆண்டுகளுக்குள் அவை உடைந்து யாருக்குமே பயனற்றதாகிவிடும். அருள்கூர்ந்து திட்டமிடவும்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை. மின் அஞ்சல் pollachinasan@gmail.com.  பேச  9788552061
உலகஅளவில் பாதுகாக்கப்பட்டவற்றின் பட்டியல் காண  http://win.tamilnool.net/search/worldlist.htm

--
தமிழ்க்கனல் -  பேச: 9788552061  -  www.thamizham.net